சென்னை, ஜூன் 19: சென்னை நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்கை விளையாட்டு அல்லாத பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதால் மைதானம் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் அமைந்துள்ளது பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம். 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், வாலிபால், கூடைப்பந்து, ஹேண்ட்பால், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. வீரர்கள் தங்கும் அறை, உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த மைதானம் முற்றிலும் குளிரூட்டப்பட்டது.
பாழாகும் மைதானம்: ஆரம்பத்தில் விளையாட்டு போட்டிகளுக்கும், அது தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட இந்த மைதானம், இப்போது திரைப்பட விழாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நாளொன்றுக்கு ரூ.3 லட்சம் வாடகை கிடைப்பதால் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், விளையாட்டரங்கை வாடகைக்கு கொடுத்துவிடுகின்றனர்.
தனியார் நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.
இங்குள்ள கார் நிறுத்தப் பகுதி நிரம்பி வழிவதால், கார் உள்ளிட்ட வாகனங்களை அருகில் இருக்கிற விளையாட்டு மைதானங்களில் நிறுத்துகின்றனர். இதனால் மைதானங்கள் சேதமடைகின்றன.
வீரர்களுக்கு அனுமதி மறுப்பு: இது மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகள் நடக்கின்றபோது அவர்கள் சார்பில் நிறுத்தப்படும் பாதுகாவலர்கள், வழக்கமாக பயிற்சி மேற்கொள்ள வரும் விளையாட்டு வீரர்களை மைதானத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று வீரர்களும், பயிற்சியாளர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
நிகழ்ச்சிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் மது வகையறாக்களுடனேயே மைதானத்திற்குள் வருகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் உள் விளையாட்டரங்கில் மட்டுமின்றி அருகில் உள்ள மைதானங்களிலும் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசியெறிந்து விடுகின்றனர். இந்த பாட்டில்களை அகற்றவே ஒரு வார காலத்துக்கும் மேல் ஆவதாக மைதான ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் உடைந்து கிடக்கும் பீங்கான் துண்டுகளால் வீரர்கள் காயமடைகின்றனர்.
மதுபாட்டில்கள்: சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று முடிவடைந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் வீசியெறிந்த மது பாட்டில்கள், குடிநீர், குளிர்பான பாட்டில்களை அகற்றும் பணியே இன்னும் முடிவடையவில்லை என்று மைதானத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்விளையாட்டு அரங்கின் வாசலிலும் ஒன்றிரண்டு மதுபாட்டில்கள் கிடந்ததைக் காண முடிந்தது.
நடவடிக்கை எடுக்கப்படும்: இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) உறுப்பினர்-செயலர் விஜயகுமாரிடம் கேட்டபோது, "நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கேட்கும் ஏற்பாட்டாளர்களிடம், மது அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு அனுமதியில்லை என்று கூறியே வாடகைக்கு கொடுக்கிறோம். இதுதொடர்பாக மைதான அதிகாரியிடம் உடனடியாக பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மைதானத்தின் வாயிலில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உள் விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சிகள் நடந்தாலும், மற்ற மைதானங்களில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள எவ்விதத் தடையும் இல்லை' என்றார்.
விளையாட்டுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், பொதுப் பயன்பாட்டுக்காக விடப்படுவதை தடுத்தால் மட்டுமே மைதானத்தை பாதுகாக்க முடியும். இல்லையெனில் இதுபோன்ற செயல்களைத் தடுக்க முடியாது என்று வீரர்களும், பயிற்சியாளர்களும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


