மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஒரே நாளில் 14 வைணவ தலங்களை தரிசிக்கலாம்! சிறப்புப் பேருந்து - முழுவிவரம்

ஒரே நாளில் 14 வைணவ கோயில்களை தரிசிக்கும் வகையில் அரசுப் போக்குவரத்து கழகத்தின் சிறப்புப் பேருந்து பற்றி...

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாடாளன் பெருமாள்.

Updated On :

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 14 வைணவ கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

பக்தர்கள் இதனை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நவக்கிரக கோவில்களுக்கு ஆன்மீக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் நவகிரக ஆன்மீக சுற்றுலா பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று வைணவ திவ்ய தேச ஆன்மீக சுற்றுலா பேருந்து துவக்கி வைக்கப்பட்டது.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கும்பகோணம் திரும்பும் படியாக ஆன்மீக சுற்றுலா பேருந்து இன்று துவக்கி வைக்கப்பட்டது.

வைணவ ஆன்மீக சுற்றுலா பேருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில், திருநகரி கல்யாண ரங்கநாதர் கோவில், திருமணிக்கூடம் வரதராஜர் பெருமாள் கோவில்,

திரு இந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி கோவில், சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில், கும்பகோணம் சாரங்கபாணி உள்ளிட்ட 14 வைணவ தலங்களுக்கு சென்று தரிசனம் செய்திடும் வகையில் இந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14 வைணவ ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீக சுற்றுலா சேவைக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் 1350 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.