வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 06) காலை சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.
நன்மை பெறும் ராசிகள், நன்மை தீமை கலந்து பெறும் ராசிகள், பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள் எவையென தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீவிஸ்வாவசு வருஷம் உத்தராயணம் மாசி மாதம் 22ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 06.03.2026 க்ருஷ்ண திருதியையும் வெள்ளிக்கிழமையும் ஹஸ்தம் நக்ஷத்ரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 04:50க்கு - காலை 08.06க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.
மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
சனியின் பலம்
மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஏழாம் பார்வையால் கன்னியா ராசியையும் - பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.
நவக்கிரகங்களில் சனிபகவான்
நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று சனி பகவான் அழைக்கப்படுகிறார்.
சனி கிரகம் மட்டுமே ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் - ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றுக்கும் அதிபதி அதாவது காரகன் சனியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.
சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள் உழைப்பு, சமூக நலம், தேசத் தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.
பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்
நன்மை பெறும் ராசிகள்: மிதுனம், கடகம், துலாம், மகரம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம், விருச்சிகம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம்
ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை
நட்சத்திரம் - சனியின் நிலை
மேஷம் - நீசம்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - நட்பு
கடகம் - பகை
சிம்மம் - பகை
கன்னி - நட்பு
துலாம் - உச்சம்
விருச்சிகம் - பகை
தனுசு - நட்பு
மகரம் - ஆட்சி
கும்பம் - ஆட்சி
மீனம் - நட்பு
Summary
According to the Vakya Panchangam, Lord Saturn moved from Aquarius to Pisces this morning (March 06).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன ராசிக்காரர்களின் பலம், பலவீனம்!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கடகம்

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மீனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



