ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

1,008 கிடா வெட்டு... ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா!

தஞ்சாவூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

Published On :31 ஜூலை 2026, 1:23 pm IST

தஞ்சாவூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் தளிகை விடுதி கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம ஐயனார் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார கிராமங்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு ஆடி மாதம் கிடா வெட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

Story image

இதேபோல் இந்த ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அய்யனார் முன்பு சுமார் 1008 கிடாக்கள் வெட்டப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

Story image

40 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி 20 ஆயிரம் கிலோ சாப்பாடு செய்யப்பட்டன. இந்த கிடா வெட்டு விருந்தில் ஆண்கள்‌ மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவை முன்னிட்டு தளிகை கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

A unique festival in Thanjavur, featuring the participation of men only, began with great enthusiasm today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.