ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் செல்வபவர்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறித்து..

Thanjavur Big Temple

தஞ்சைப் பெரிய கோயில் - file photo

Published On :13 ஜூலை 2026, 12:58 pm IST

தஞ்சைப் பெரிய கோயில் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, இன்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டடக்கலைக்கும் -  சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலைக் காணத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். 

பெரிய கோயிலுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாகனங்களை சாலைகளிலே நிறுத்திச் செல்வதால் தஞ்சாவூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் 
தஞ்சாவூர் பெரிய கோயில் சாலை ஒரு வழிப் பாதையாகப் போக்குவரத்து காவலர்கள் மாற்றம் செய்துள்ளனர். இந்த ஒருவழிப் பாதை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

கும்பகோணம், அரியலூர், திருக்காட்டுப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் காந்திஜி சாலையைப் பயன்படுத்த வேண்டும், திருச்சி, புதுக்கோட்டை, புதிய பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள் பெரிய கோயில் சாலை வழியாகச் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.‌

மேலும், வாகன நிறுத்துமிடம் பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்தத்தில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களைப் பெரிய கோயில் சாலையில் நிறுத்தக்கூடாது. மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.