ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமர்நாத் யாத்திரை: இதுவரை 1.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அமர்நாத் யாத்திரை தொடங்கிய ஏழு நாள்களில் 1.45 பக்தர்கள் தரிசனம் செய்தது பற்றி..

Amarnath shrine

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் - கோப்புப்படம்.

Published On :9 ஜூலை 2026, 12:32 pm IST

அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 1.45 லட்சம் பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்துள்ளனர்.

நடப்பாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கியது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியோர்கள், சாதுக்கள் உள்பட அனைவரும் அமர்நாத் யாத்திரையை ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமிலிருந்து 8,150 யாத்ரீகர்கள் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாத்திரை தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 52,816 யாத்ரீகர்கள் ஜம்மு முகாமிலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை புறப்பட்ட குழுவில் 6,095 ஆண்கள், 2,037 பெண்கள், 15 குழந்தைகள் மற்றும் மூன்று திருநங்கைகள் இடம்பெற்றிருந்தனர். பக்தர்கள் இரண்டு குழுக்களாகப் புறப்பட்டனர்.

இதில் 3,445 பக்தர்கள் 168 வாகனங்களில் பால்டால் முகாமிற்கும், 4,705 பக்தர்கள் 166 வாகனங்களில் பாரம்பரியமான பஹல்காம் வழித்தடத்திலும் புறப்பட்டுச் சென்றனர்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர்கள், யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்தாண்டில் இதுவரை 1.45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் இப்புனிதத் தலத்தில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

57 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை, ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று நிறைவடைகிறது.

A batch of 8,150 pilgrims left the Bhagwati Nagar base camp here for the Amarnath cave shrine in Kashmir on Thursday, amid tight security, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.