
விநாயகர் சதுர்த்தி! தமிழகம் முழுவதும் 1.08 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை!
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை பற்றி...

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற கோ பூஜை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா சிறப்பாக நடைபெற தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பகவத் விநாயகர் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் கோ பூஜை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்திக்கான பத்திரிக்கைக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு "விவசாயம் காக்கும் விநாயகர் சதுர்த்தி" விழாவாகக் கொண்டாட உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், புதிதாக விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கர்நாடகம் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கும்பகோணத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் விஜய் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






