ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்!

ஆவணி மூலத்திருவிழா இன்றுகாலை கொடி ஏற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது பற்றி..

Flag-hoisting

நெல்லையப்பர் கோயில் - video crop

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:05 pm IST

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா இன்றுகாலை கொடி ஏற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புகளை உடைய அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரும் ஆவணி மூலத்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

இந்தாண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 11 தினங்கள் நடைபெற உள்ளது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன. திருவிழா தொடக்கமாக கொடிப்பட்டம் உலா நடைபெற்றது.

Story image

பின்னா், கொடிக்கு மரியாதைகள் செய்யப்பட்டு காலை 05.00 - 06.00-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகத்திரவியம் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

அலங்காரம் செய்யப்பட்ட கொடி மரத்திற்கு சோடஷ தீபாரதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி சுவாமி அம்பாளுக்குத் தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

4ம் திருநாளான வருகின்ற 16ம் தேதி இரவு பஞ்ச முா்த்திகள் வீதிஉலாவும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்தாம் திருநாள் அன்று கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் பெறும் நிகழ்வு வருகின்ற 23ம் தேதி ஆவணி மூலத்தன்று மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோயிலில் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.