ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்!

பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்த, ஆடிப்பூரத் தேரோட்டம் தொடர்பாக...

temple

திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம். - படம்: தினமணி

Published On :13 ஆகஸ்ட் 2026, 4:08 pm IST

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஐயாறப்பர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில், பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், திருவையாறு திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமானதாகவும், நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

ஆடிப்பூரத் திருவிழா பத்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல், இந்தாண்டு கடந்த ஆக. 5ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இந்த விழாவினை முன்னிட்டு, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது‌. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(ஆக. 13) நடைபெற்றது.

அறம் வளர்த்த நாயகி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழத்துனர். ராஜ வீதிகளில் உலா வந்த அறம் வளர்த்த நாயகியை, ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Summary

During the temple car procession held to mark Aadi Pooram at the 2,000-year-old Aiyappar Temple, women alone pulled the chariot and worshipped the deity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.