விழுப்புரம் : தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் நகரில் ஆஞ்சனேயர் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சனேய சுவாமிக்கு 20-ஆவது ஆண்டாக 5000 லிட்டர் பாலைக் கொண்டு பாலாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஜெயஜெய ஆஞ்சனேய சுவாமிக்கு தமிழ் வருடப்பிறப்பன்று 5000 லிட்டர் பாலாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி 20ஆவது ஆண்டாக தமிழ்ப் புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை காலை பாலாபிஷேகத்துக்கான பூஜைகள் நடைபெற்றன. 90 அடி உயர ஆஞ்சனேய சுவாமிக்கு அரசமங்கலம் சு. வெங்கடேஷ்பாபு சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து, பாலாபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து பெரிய அளவிலான பேரல்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பால், மோட்டார் மூலம் குழாய் வழியாக மேலே ஏற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் பால் பாக்கெட்டுகளை வழங்கினர். 5000 லிட்டர் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சனேயரை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பாலாபிஷேக நிகழ்வில் ஆஞ்சனேய சுவாமி சிலையை நிறுவிய டி. தனுசு மற்றும் டி.ராஜாமணி, ஜெயராமன், எல்.எம்.பத்மநாபன், டி.பாலமணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

குடந்தையில் இருந்து சேலம் சென்றது : 51 அடி உயர, 65 டன் ஐம்பொன் சிலை

முதல் தேசியக் கொடியை உருவாக்கிய குடியாத்தத்தில் 100 அடி உயர கம்பம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


