திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருப்பம் தரும் தினப்பலன்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.

News image
Updated On :11 ஜூன் 2024, 1:29 am

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

11-Jun-24 (செவ்வாய்க்கிழமை)

மேஷம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 9

ரிஷபம்:

இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. குடும்ப கவலை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஊதா

அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்:

இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்: 2, 5

கடகம்:

இன்று வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 5, 7

சிம்மம்:

இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 3

கன்னி:

இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6, 9

துலாம்:

இன்று சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 5

விருச்சிகம்:

இன்று விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 7

தனுசு:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

மகரம்:

இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஊதா

அதிர்ஷ்ட எண்: 8, 9

கும்பம்:

இன்று திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5, 7

மீனம்:

இன்று எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4, 8

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.