/

இந்த வாரம் யாருக்கு யோகம்?

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

News image
வார பலன்கள்
Updated On :26 ஜூலை 2024, 8:18 am
Updated On :26 ஜூலை 2024, 8:18 am

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெற்றோருடன் இணக்கமான உறவு மேம்படும். பெரியோர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்பால் பாராட்டப்படுவார்கள். வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பயணங்கள்அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

எடுத்த காரியங்கள் வெற்றியாக முடியும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆற்றல் உண்டாகும். அதிகாரம், கௌரவம், தலைமைப் பொறுப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் வீண் விரயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளைச் செய்து புகழுடன் விளங்குவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களுடனான மனக் கசப்புகள் அகலும். சுப விரயங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் பலன் உண்டாகும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைத் துறையினருக்கு வருவாய் தாமதப்படும். பெண்கள் மருத்துவ உதவிக்குச் செலவழிப்பீர்கள். மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். தொழிலை செம்மையாக நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அறிவுரைப்படி நடப்பீர்கள். வியாபாரிகளின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல வருவாய் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடும். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

விடாமுயற்சியால் காரியங்களைச் சுபமாக்க முடியும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். அறிவாற்றல் அதிகரிக்கும். பணவரவு உண்டு.

உத்தியோகஸ்தர்கள் பணிகளை முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் ஒதுங்கியே இருப்பீர்கள். விவசாயிகள் பயிர் விளைச்சலை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினரின் படைப்புகள் மக்களைக் கவரும். பெண்கள் பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். மாணவர்கள் தகுதியான நண்பர்களைத் தேர்வு செய்து பழகவும்.

சந்திராஷ்டமம் - ஜூலை 26,27.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குலதெய்வ வழிபாட்டால் நன்மையே நடக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரிகள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்பீர்கள்.

விவசாயிகள் வேலையாள்களைத் தட்டிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் சாதுர்யமாகச் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். பெண்களுக்குப் பணப் புழக்கம் உண்டு. மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 28,29.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எதிர்பார்த்த நன்மைகள் கூடிவரும். அரசால் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் துரிதமாக நடக்கும். பிறரிடம் பேசும்போது பேச்சில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் லாபம் அடைவீர்கள். வியாபாரிகள் போட்டிகளை முறியடிப்பீர்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கடுமையாக உழைப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் சிக்கனமாக இருந்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - ஜூலை 30, 31.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பெற்றோருடன் இணக்கமான சூழல் உண்டாகும். பணம், பதவிகள் தேடி வரும். அரசு சலுகைகள் கிடைக்கும். தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மனக் குழப்பத்தினால் பணிகளை முடிக்கத் தாமதமாகும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் பிறருடன் உறவை மேம்படுத்துவீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆக. 1

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பண வரவு குறையும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பப் பெருமையும் அந்தஸ்தும் உயரும். நெருங்கியவர்களிடம் விரோதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் அனுசரித்து நடக்கவும். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் அவதூறு பிரசாரத்தால் அவதி அடைவீர்கள். கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைக்க தாமதமாகும்.

பெண்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியமும் மன வளமும் சீராகும். பெரியோரின் ஆசி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் உறவு மேம்படும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறக்க முயற்சிப்பார்கள். விவசாயிகளுக்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்குப் பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த பயணங்கள் கைகூடி வரும்.

பெண்கள் குழந்தைகளால் பெருமையடைவீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றியை அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சொத்து விஷயங்களில் வில்லங்கங்கள் அகலும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்த,ர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவார்கள். விவசாயிகளுக்கு லாபம் பெருகும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் உறுதியுடன் ஈடுபடுவீர்கள்.

கலைத் துறையினர் பிறரின் ஆலோசனைகளை கேட்பீர்கள். பெண்கள் எதிர்காலத்துக்குத் திட்டமிடுவீர்கள். மாணவர்கள் விளையாடும்போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் திருமண நிகழ்வுகள் கைகூடும். உறவினர்களுடன் நல்ல புரிதல் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். வியாபாரிகள் நன்கு உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். விவசாயிகள் திட்டமிட்ட வேலைகளைச் சுறுசுறுப்புடன் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் மக்களுக்காக நன்முறையில் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினர் நலிந்த கலைஞர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் பிரிந்தவர்களை ஒன்றிணைப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.