அக்டோபர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை)
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு(வ), ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எதையும் துணிச்சலுடன் செய்யக் கூடிய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் நீங்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது துரிதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது.
கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். அரசியல்துறையினருக்கு சுபச்செலவு கூடும்.
மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
அசுபதி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவு இருக்கும்.
கார்த்திகை - 1:
இந்த மாதம் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
பரிகாரம்: முருக பெருமானை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12
********
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2023 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அடுத்தவர்களின் எண்ணங்களைக்கேட்டு காரியங்களை வெற்றிகரமாக நகர்த்தும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
கார்த்திகை - 2, 3, 4:
இந்த மாதம் பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும்.
ரோகினி:
இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் - 1, 2:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
********
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
நம்பிவருபவர்களுக்கு உதவும் குணம் உடைய மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். மனதில் இருந்த கவலை அகலும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செலவு ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.
மிருகசீரிடம் - 3, 4:
இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
திருவாதிரை:
இந்த மாதம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.
புனர்பூசம் - 1, 2, 3:
இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
********
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உடல் உழைப்பும் மன தைரியமும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும் சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். உடல்நலக் கோளாறு அகலும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்துறையினர் சக தோழர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது
மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
புனர்பூசம் - 4:
இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
ஆயில்யம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
********
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் `தேவையற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். மனவருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
கலைத்துறையினருக்கு காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்துறையினருக்கு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.
மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.
மகம்:
இந்த மாதம் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.
பூரம்:
இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
உத்திரம் - 1:
இந்த மாதம் ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: சிவனை வணங்கி வர மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
********
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சூர்யன், புதன்- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ), ராகு - அயன சயன் போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.
தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு பணதேவை உண்டாகலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது.
உத்திரம் - 2, 3, 4:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.
ஹஸ்தம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வீண் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
சித்திரை - 1, 2:
இந்த மாதம் வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.
பரிகாரம்: முடிந்த வரை அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


