ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பங்குனித் திருவிழாவையொட்டி பெரிய கொடி மரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியினை ஏற்றும் பட்டாட்ச்சாரியார்கள்.

Updated On :11 மார்ச் 2023, 5:51 am

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும், அதனை தொடர்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன் பெருமாள் எழுந்தருளும் வெளிப்பிரகார தேரோட்டம்,கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறும்.

நிகழாண்டிற்கான தொடங்க விழா ,சனிக்கிழமை காலை த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில்,பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியப்பட்டி பட்டாச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

நிகழ்ச்சியில் , முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் , மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன் , நகர்மன்ற உறுப்பினர் பா.சத்யா அன்பழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனித்திருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி .

பங்குனித்திருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி .

இத்திருவிழாவினையொட்டி, ஒவ்வொருநாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி, கல்யாணம், கண்ணன், கிருஷ்ணர், ராஜ,பட்டாபிராமர், வேணுகோபாலர், மாயவநாதன், வைகுண்டநான் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் அப்போது சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்வுகளாக,மார்ச்.16 .கண்டபேரண்ட பக்ஷி, 20. தங்க சூர்யபிரபை, 25. கோரதம், 26. காலை வெண்ணைத்தாழி, இரவு வெட்டுங்குதிரை, 27ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 29ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை, நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், மண்டகப்படிதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.