ராகு, கேது பகவான்கள் நின்ற பாதையில் சூரிய, சந்திரப் பகவான்கள் கூடுவதை தான் நாம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். ஆனால், வேறு கிரகங்கள் கூடுவதும் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சுக்கிர, சந்திர பகவான்கள் கூடுவது, சுக்கிர, செவ்வாய் பகவான்கள் கூடுவது, செவ்வாய், சந்திர பகவான்கள் கூடுவது, சனி, செவ்வாய் பகவான்கள் கூடுவது போன்ற சேர்க்கைகள் ஏற்படலாம்.
வான மண்டலத்தில் ஒரு கிரகம் வேறு ஒரு கிரகத்தின் ஒளிப் பாதையில் வரும்போது, அக்கிரகத்தின் பின் நிற்கும் ஒளியை நாம் பார்க்க முடியாது. இதையே நாம் கிரகணம் பிடிக்கிறது என்று சொல்கிறோம். நமக்கு சமீபத்தில் உள்ள கிரகம் அதற்கு பின்புறத்தில் உள்ள கிரகத்தின் ஒளியை மங்கச் செய்து விடுகிறது. இதனால் அக்கிரகத்தின் தோற்றமும் பிரகாசமும் அழகும் மறைகின்றன. இது கிரகணத் தோஷத்தால் ஏற்படுகிறது என்பது பொருந்துகிறது.
கிரகணம் பிடித்த கிரகம் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் உண்டு பண்ணும் என்று மகாதேவர் ஜாதக தத்துவம் என்ற நூலில் கூறியிருக்கிறார். ராசி மண்டலத்தில் சில கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தாலும் அக்கிரகங்கள் கிரகணமடையும்போது அவைகள் பலமிழந்து தங்கள் தசாபுக்தி காலங்களில் நற்பலன்களைத் தருவதில்லை என்று ஹோராச்சாரம் என்ற நூல் எடுத்துச் சொல்கிறது.
சுக்கிரப் பகவானையும், சனி பகவானையும் தவிர மற்ற கிரகங்கள் யாவும் கிரகணம் பிடிக்கும்போது அக்கிரகங்கள் அரை பங்கு வலிமையை இழந்து விடுகின்றனர் என்றும், சந்திர பகவான் கிரகண பிடிப்பில் இருந்தால் அந்த ஜாதகருக்கு பதவி வீழ்ச்சி, மூளைக் கோளாறு போன்ற பிணி பாதிப்புகள் உண்டாகும் என்றும் சில சமயம் நீரால் கண்டத்துக்கு ஆளாக கூடும் என்றும் சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகம் கிரகணம் அடைந்தால் கஷ்டங்களும் கவலைகளும் பெருகும் எதையும் அழிக்கும் மிருக வெறி உண்டாகும் புதன் கிரகம் கிரகணம் அடைந்தால் விளைச்சல் நிலங்களால் நஷ்டமும் தீராத மனக்கவலைகளும் உண்டாகும்.
குரு கிரகம் கிரகணம் அடைந்திருந்தால் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும். சனி கிரகம் கிரகணம் அடைந்திருந்தால் வருவாயும் செலவும் சரிசமமாக இருக்கும். சிந்தனை தோன்றும். திக்கெட்டிலும் புகழ் பரவும். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் சனி கிரகம் கிரகணம் அடைந்திருந்தாலும் தன்னுடைய வலிமையை இழக்காது என்பது நிரூபணமாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


