சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாள் வரும் திரிதியை திதியில் வருவதே அட்சயத் திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்று பொருள். அதாவது க்ஷயம் என்றால் கேடு, அக்ஷயம் என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.
வெள்ளை நிறப் பொருள்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருள்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளை நிறம் என்றால் பிளாட்டினம் வாங்கி அணிய வேண்டும், மஞ்சள் நிறம் என்றால் தங்கத்தை வாங்கி அணிய வேண்டும் என்பதெல்லாம் சரியானதல்ல.
பொதுவாக தானியங்களில்தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால்தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும்போது பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே வரச்சொல்வார்கள்.
அட்சய திருதியை அன்று பச்சரிசி வாங்குவது நல்லது. மஞ்சள் துணியில், சிறிது அரிசி எடுத்துக் கட்டி பீரோவிலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி டப்பாவிலும் போட்டு வைத்தால் என்றும் குறைவில்லாத உணவு கிடைக்கும்.
அதற்கடுத்து மஞ்சள், இதில் தான் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு அதை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
இதுமட்டுமன்று, அன்றைக்கு தானம் செய்தால் நல்லது. தானம் என்றால் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் கொடுக்க வேண்டும். காசாகக் கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம். தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை, வெள்ளியும் வாங்கலாம். பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருள்களெல்லாம் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


