ஜோதிட ரீதியாக வரும் புத்தாண்டிலாவது, உங்கள் தாயை பற்றி முழுமையாக அறியுங்களேன்..!
ஒருவரின் உணர்ச்சி பெற்ற வலிமை, உணர்ச்சி பெற்ற ஆதரவு மற்றும் உணர்ச்சி பெற்ற உறவு


ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்
ஒருவரின் உணர்ச்சி பெற்ற வலிமை, உணர்ச்சி பெற்ற ஆதரவு மற்றும் உணர்ச்சி பெற்ற உறவு (EMOTIONAL STRENGTH, EMOTIONAL SUPPORT & EMOTIONAL RELATIONSHIP) யாரிடம் இருந்து நாம் பெறுகிறோம் என்பதை அறிய அந்த ஜாதகரின் ஜனன ஜாதகத்தின் நான்காம் பாவமே கூறும், அவரின் தாய் என்று ஆணித்தரமாக. நான்காம் இடம் என்பது சமாதானம், அமைதி, பாதுகாப்பான, சுகமான தங்குமிடம் என்பதை.
எப்பொழுதெல்லாம் நமக்கு அமைதி தேவை, நோயின் வலியை தாங்க நினைக்கிறோமோ அப்போது தாயை நோக்கி ஓடுகிறோம், குழந்தை முதல் கடைசி மூச்சு வரை, அம்மாவென்று கதறினால் ஒரு மனதிற்கு சுகமளிப்பதை ஒவ்வொருவரும் உணருகிறோம். எவ்வளவு முடிந்த வரை, சிறப்பானதை அளிக்க முடியுமோ அதனை, ஏன் தனது உயிரையே கூட தரும் ஒரு தாயின் பாசம்.
ஒரு தாயின் உணர்ச்சி தரும் பந்தத்தை வேறு எதுவும் இந்த உலகத்தில் தர இயலாது. அப்படிப்பட்ட ஒருவரின் தாயை பற்றி அறிய ஜோதிடத்தில், அந்த
ஜாதகரின் ஜனன ஜாதகத்தின் 4-ஆம் இடம் / பாவத்தைக் கொண்டு அறிய முடியும்.
அம்மாவின் பாசமிகு, உணர்ச்சிமிகு பந்தத்தைக் காட்டிலும் இவ்வுலகில் வேறு பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நிச்சயம் கிடையவே கிடையாது. உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினம் வீடு, உங்கள் தாயின் வாழ்க்கையைப் பற்றி கூறும். உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து இரண்டாம் வீடு, தாயின் வருமானம், லாபம், வெற்றி முதலியன பற்றி அறியலாம்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து மூன்றாம் வீடு, தாயின் செலவுகள், மருத்துவமனையில் இருக்கும் காலம், வெளிநாட்டுப் பயணம் பற்றிக் கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து நான்காம் வீடு, உங்கள் தாயின் ஒட்டுமொத்த வாழ்வைப் பற்றியும், குணநலன்கள், அணுகுமுறை, அவரின் நம்பிக்கைப் பற்றி கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து ஐந்தாம் வீடு, உங்கள் தாயின் வங்கி கணக்கில் உள்ள மீதத்தைப் பற்றி கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து ஆறாம் வீடு, உங்கள் தாயின் உடன் பிறப்புகள் பற்றியும், நெருங்கிய உறவுகள் பற்றியும் கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து ஏழாம் வீடு, உங்கள் தாய் அவள் வீட்டில் பெறும் மகிழ்வு பற்றியும், வண்டி வாகனங்கள் பற்றியும், அவளுக்குண்டான சொத்துக்கள் பற்றியும் கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து எட்டாம் வீடு, உங்கள் தாயின் படைப்பாற்றல், யூகம், குழந்தைகளுடன் உண்டான பாசம் பற்றிக் கூறும். உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து ஒன்பதாம் வீடு, உங்கள் தாயின் விரோதிகள், நோய்கள், கடன் இவற்றைப் பற்றி கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து பத்தாம் வீடு, உங்கள் தாயின் வாணிக இயல் பற்றியும் அவரின் பங்குதாரரிடம் கொண்ட உறவு முற்றைப்பற்றி கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து பதினோராம் வீடு, உங்கள் தாயின் பூர்வீக சொத்து மற்றும் அவர்களுக்கு வரும் வியாதி / உடல்நிலை பாதிப்புகள் பற்றிக் கூறும்.
உங்கள் ஜனன ஜாதகத்தின் லக்கினத்திலிருந்து பன்னிரண்டாம் வீடு, உங்கள் தாயின் கல்வி, நீண்ட தூர பிரயாணங்கள், அவர்களுக்கான அதிர்ஷ்டம் பற்றிக் கூறும். இனி ஜாதகரின் நான்காம் வீடு பெறும் இராசியை வைத்து பலன்களை காண்போம்.
உங்கள் ஜனன ஜாதகத்தில், நான்காம் வீடு மேஷ ராசியாக வருமாயின் :-
உங்கள் தாய் ஒரு தலை சிறந்த தாயாவாள். அவர்களுக்குத் தேவை, பின் வரும் நான்கு மட்டும் தான். சரியான ஒன்று , கண்டிப்பான, ஆக்கிரமிக்கும் தன்மையான மற்றும் சற்று ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டவளாக இருப்பார் .
உங்கள் ஜனன ஜாதகத்தில், நான்காம் வீடு ரிஷப ராசி யாக வருமாயின் :-
உங்கள் தாய் நீங்கள், நேரத்திற்கு உணவு உண்பதையும், நேரத்திற்கு உறங்கச் செல்வத்தையும் விரும்புவாள். நீங்கள் எவ்வளவு அவர்களைத் தொல்லை கொடுத்தாலும் நில ராசியைக் கொண்ட இந்த வீட்டால், அவர்கள் உங்களுக்குப் பின்னால் தூண் போல் இருந்து காப்பார்கள். அவர்களைப் பாராட்டவும் சமயத்தில் பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சி ஊட்டினால் கரைந்து போவார்கள்.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் இதே நாளில் காணலாம் ...
- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்
தொடர்புக்கு : 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...