ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பச்சைப் புத்தகம்

எளிய வாசிப்பில் புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு உகந்த நூல்.

Published On :20 ஜூலை 2026, 6:48 pm IST

பச்சைப் புத்தகம் -பா. சுந்தர், பக். 112; ரூ. 130; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044- 2372 6882.

சினிமா, வரலாறு, இலக்கியம் குறித்த சுவாரஸ்யான கட்டுரைகளின் தொகுப்பு. மென்பொருள் பொறியாளரான நூலாசிரியரின் வசீகரமான எழுத்துநடை வாசிப்பு சுழலுக்குள் எளிதில் சிக்க வைத்துவிடுகிறது.

வரலாற்றுத் தகவல்களை ஆண்டுவாரியான புள்ளிவிவரங்களாகக் கூறி சலிப்படையச் செய்யாமல் திண்ணைக் கதை போல சரளமாக எடுத்துரைக்கிறார்.

சினிமாவில் தொடங்கி, சங்க காலத்தில் புகுந்து, சமகால தொழில்நுட்பத்துக்கு வந்தடைகின்றன பல கட்டுரைகள். தேர்ந்த நடையால் வேறு வேறு சம்பவங்களை ஓரிடத்தில் மையம் கொள்ள வைத்திருப்பது சிறப்பு.

திருவரங்கம் கோயில் துலுக்க நாச்சியார், இஸ்ரேல் ஆல்பம் சஜான்கா, பாண்டியன் நெடுஞ்செழியன், லோகேஷ் கனகராஜ், ஆதிக்குடிகளின் ஆற்றல், விஎஃப்எக்ஸ் செயற்கை நுண்ணறிவு என பல்வேறு விஷயங்களையும் விளக்கியிருப்பது வாசிப்பனுவத்துக்கு வலு சேர்க்கிறது.

சின்ன சின்ன விஷயங்களுக்குப் பின்னால் அறியப்படாமல் இருக்கும் பல செய்திகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, பரங்கியர்கள் என பிரிட்டிஷாருக்கு எப்படி பெயர் வந்தது என்பதை அறிய அதன் வேர்ச் சொல்லைத் தேடி எடுத்து விவரித்திருப்பது சுவாரஸ்யம்.

ஜனரஞ்சகமான கட்டுரைகளுக்கு இடையிடையே புறநானூற்றையும், சங்க இலக்கியப் பாடல்களையும் புகுத்தியிருப்பது இலக்கியத்தை இளம் தலைமுறையினருக்கு கடத்தும் புதிய உத்தி. எளிய வாசிப்பில் புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு உகந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.