ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழர் தலைவர் பழ. நெடுமாறன்

இன்றைய தலைமுறையினருக்குத் தாங்கள் வாழும் காலத்தில் வாழும் ஆளுமையையும் அவருடைய போராட்டங்களையும் அவற்றால் தமிழர்கள் பெற்ற பலன்களையும் அறிமுகப்படுத்தும் நூல்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:05 pm IST

தமிழர் தலைவர் பழ. நெடுமாறன்- கண. குறிஞ்சி; பக். 136; ரூ. 130; புதுமலர் பதிப்பகம், திண்டல், ஈரோடு- 638 012. ✆ 94433 07681.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் நெடிய அரசியல்- போராட்ட வாழ்வை அவருடைய முழுமையான நேர்காணல் வழியே ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் கண. குறிஞ்சி.

தமிழ்நாட்டில் கோவை, சேலம் தவிர்த்து அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார் பழ.நெடுமாறன். காமராஜர், பெரியார், இந்திரா காந்தி, அண்ணா எனத் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததுடன், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர்.

குடும்பப் பின்னணியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் திராவிட மாணவர் இயக்கப் போராட்ட அனுபவங்களில் தொடங்கி, திமுக, தமிழ்த் தேசிய கட்சி, காங்கிரஸ் எனத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கம் கண்டது வரையிலுமான நிகழ்வுகளை விளக்குகிறார் நெடுமாறன்.

யாழ் சென்றுவந்து நூலக எரிப்பு குறித்து முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் பிரதமர் இந்திரா காந்தியை அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்திக்கச் செய்தது, பெரியாறு அணைப் பிரச்னையை முதன்முதலில் எழுப்பியது, மதுரை மாநகர் மேம்பாட்டுக்கான கோரிக்கைகள் என சட்டப்பேரவை உறுப்பினராகப் பல்வேறு பணிகள்.

தமிழ்நாட்டு அரசியலின் தலைகீழ் மாற்றங்கள், ஈழத் தமிழர் போராட்டம், ராஜீவ் காந்தி படுகொலையும் விசாரணையும், 26 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் சட்ட- மக்கள் போராட்டங்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டதும், வீரப்பன் பிரச்னையும் கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டதும் எனப் பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் தமது பங்களிப்பை விரிவாக நெடுமாறன் விளக்குகிறார்.

மொழிவழியாக மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்ட புதிய சூழலில் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சியை நிறுவும் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் நெடுமாறன்.

இன்றைய தலைமுறையினருக்குத் தாங்கள் வாழும் காலத்தில் வாழும் ஆளுமையையும் அவருடைய போராட்டங்களையும் அவற்றால் தமிழர்கள் பெற்ற பலன்களையும் அறிமுகப்படுத்தும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.