ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாணிக்கவாசகர்

ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள் படிக்க வேண்டிய நூல்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 6:53 pm IST

மாணிக்கவாசகர்-முனைவர் தெ. ஞானசுந்தரம்; பக். 114; ரூ. 110; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி- 642 003. ✆ 04259-236 030.

மாணிக்கவாசகரின் வரலாறு, காலம், அவர் அருளிய நூல்கள், அவரது ஆளுமை ஆகிய பொருளடக்கங்களில் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாணிக்கவாசகரின் புலமையை அறிந்த பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்து சிறப்பு செய்து 'தென்னவன் பிரமராயர்' என்று சிறப்புப் பெயர் சூட்டி, தன் அமைச்சரவையில் இடம்பெறச்செய்தார். குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் சிவத்தொண்டு செய்து அரசுப் பணத்தை செலவிட்டதை அறிந்த மன்னன் கோபமடைந்து, அவரை சிறைபிடிக்க, தன் பக்தனுக்காக நரிகளை பரிகளாக்கி மதுரைக்கு சிவபெருமான் வந்தார்.

பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டு, அந்த அடி அனைத்து ஜீவராசிகள் மீதும் விழுந்துவலிக்க, அசரீரியாய் மாணிக்கவாசகரின் புகழை இறைவன் எடுத்துக்கூறி அவரை சிறையிலிருந்து விடுவித்தார். பின்னர், பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை சிரம்தாழ்ந்து பாதம் பணிந்து வணங்கினார் என்பதைப் படிக்கும் போது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

பல சிவத் தலங்களுக்குச் சென்று இறைவனை மாணிக்கவாசகர் புகழ்ந்து பாடியது, தில்லையில் மாணிக்கவாசகர் சொல்ல வேதியர் வடிவில் வந்த சிவபெருமான் திருவாசகம் முழுவதையும் எழுதினார் என பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்பது விவாதப் பொருளாக இருந்துவரும் நிலையில், அவர் தேவார மூவர்க்கும் முற்பட்டவர் என்று மாணிக்கவாசகரின் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு வெள்ளை வாரணார், மறைமலையடிகளின் வாதங்கள் நூலில் இடம்பெற்றிருப்பது சிந்திக்க வைக்கிறது.

ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.