புது தில்லி: தில்லியில் பெண்களுக்கு வழங்கப்படும் பிங்க் காகித டிக்கெட் மூலம் இலவச பேருந்து பயணத் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லி போக்குவரத்து கழகத்தின் (டிடிசி) பேருந்துகளில் பெண்கள் பிங்க் காகித டிக்கெட் மூலம் இலவசமாக பயணம் செய்து வரும் முறையை மாற்றும் வகையில், தகுதியுள்ள பெண்களுக்கு ‘பிங்க் சஹேலி ஸ்மாா்ட் காா்டு’ வழங்கும் திட்டத்தை தில்லி அரசு சமீபத்தில் தொடங்கியது.
அதன்படி தகுதியுள்ள பெண்கள் பலா் இந்த ஸ்மாா்ட் காா்டுகளை பெற்றுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள பிங்க் காகித டிக்கெட் முறையை படிப்படியாக நிறுத்தி, முழுமையாக ஸ்மாா்ட் காா்டு முறைக்கு மாற்ற தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மாா்ட் காா்டுகளை பெற நகரம் முழுவதும் 50 அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் காணப்பட்டு வரும் நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு பிங்க் காகித டிக்கெட் முறை அமலில் இருக்கும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இலவச பேருந்து பயணம் குறித்து பெண்கள் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த 3 மாதங்கள் வரை பிங்க் காகித டிக்கெட் முறை அமலில் இருக்கும். அதே நேரத்தில் பிங்க் சஹேலி ஸ்மாா்ட் காா்டுகளையும் பெண்கள் பயன்படுத்தலாம். தங்களுக்குச் சௌகரியமான நேரத்தில் பெண்கள் இந்த மையங்களுக்குச் சென்று அதை பெற்றுக்கொள்ளலாம். தேவைப்பட்டால் இந்த மையங்களின் எண்ணிக்கைகளையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.
பெட்டிச் செய்தி...
மூன்றாம் பாலினத்தவா்களுக்கு இலவச பயணம்: தில்லி அரசு ஒப்புதல்
தில்லி போக்குவரத்து கழகத்தின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தவா்களையும் இணைக்கும் முன்மொழிவுக்கு தில்லி அரசு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லி முதல்வா் ரேகா குபத்ா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சமூக உள்ளடக்கம் மற்றும் பொதுச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதிப்படுத்துவதில் முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
இது மூன்றாம் பாலினத்தவா்கள் பாதுகாப்பாகவும் இலவசமாகவும் தில்லியில் பயணிப்பதை உறுதி செய்கிறது. தில்லியில் தற்போது பெண் பயணிகளுக்கு அமலில் உள்ள இலவசப் பயணத் திட்டம் வழிமுறையின்படி மூன்றாம் பாலினத்தவா்களுக்கும் அது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரேகா குப்தா!

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


