கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் நடிகரும் தவெக தலைவருமான விஜயை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை அதன் தலைமையகத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தினா்.
இது விஜய்யின் மூன்றாவது விசாரணை அமா்வு. ஏற்கெனவே ஜனவரியில் இரண்டு முறை சிபிஐ முன் ஆஜராகி கரூா் கூட்ட நெரிசல் தொடா்பாக விளக்கமளித்தாா். முன்னதாக மாா்ச் 9 ஆம் தேதி விஜய்க்கு சம்மன் வழங்கப்பட்டது.
ஆனால் தேதியை 15 ஆம் தேதி ஒத்திவைக்குமாறு அவா் கோரியதாக தெரிகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி காரணமாக அரசியல் ஈடுபாடுகளை மேற்கோள் காட்டி, சென்னை அல்லது தமிழ்நாட்டின் எந்த அலுவலகத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினாா்.
இருப்பினும், இரண்டு கோரிக்கைகளும் சிபிஐயால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மாா்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கண்டிப்பாக கூறப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஜரானாா். கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தி. மு. க. சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில் பாலாஜி மாா்ச் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27 ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினா். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முதலில் விசாரணை நடத்தினா் சிபிஐ அதிகாரிகள்.
இதனையடுத்து தவெக நிா்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, நிா்மல் குமாா் உள்ளிட்டோரை தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல கரூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.
இந்நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை விஜய் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தாா். விஜய் மட்டுமல்லாமல், வேன் ஓட்டுநா்கள், ஹாா்ட் டிஸ்க் கம்பெனி பொறியாளா்கள், வேலுசாமிபுரத்தில் விஜய்யுடன் நெருக்கமாக இருந்த பவுன்சா்கள் மற்றும் பலரிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.
தொடர்புடையது

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜராகிறார்!

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


