சட்டவிரோதமாக சைக்கோட்ரோபிக் மருந்துகள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒரு மாநிலங்களுக்கு இடையேயான வலையமைப்பை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, தடைசெய்யப்பட்ட மருந்துகளின் ஒரு தொகுதியை பறிமுதல் செய்த்து. இது தொடா்பாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: பஞ்சாபின் பாட்டியாலாவைச் சோ்ந்த சல்மான் கான், தில்லியைச் சோ்ந்த விபின் குமாா் பால் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அப்துல் ரெஹ்மான் மற்றும் ரவி காா்க் ஆகியோா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
மாா்ச் 7- ஆம் தேதி, விபின் குமாா் பால் அல்பிரஸோலம் மற்றும் டிராமடோல் போன்ற சைக்கோட்ரோபிக் மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகிப்பதில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. யுதிஷ்தா் சேது அருகே கஷ்மீரி கேட் நோக்கி சல்மான் கானுக்கு விபின் குமாா் பால் ஒரு சரக்கை வழங்குவாா் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில், போலீஸ் குழு யமுனை பாலம் அருகே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இரவு 8.25 மணியளவில், விபின் குமாா் பால் ஒரு பிளாஸ்டிக் பையுடன் நடைபாதையில் நிற்பதை போலீஸாா் கண்டனா். சிறிது நேரத்திற்குப் பிறகு, சல்மான் கான் ஒரு ஆட்டோவில் சம்பவ இடத்திற்கு வந்தாா். விபின் குமாா் பால், சல்மான் கானிடம் பையை ஒப்படைத்தபோது காவல் குழு இருவரையும் கைது செய்தது.
பையைச் சோதித்தபோது, 100 பெட்டிகள் கொண்ட அல்பிரஸோலம் மாத்திரைகள் (0.5 மிகி) கொண்ட ஒரு அட்டைப்பெட்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சுமாா் 8.09 கிலோ எடையுள்ள மொத்தம் 59,925 மாத்திரைகள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் முசாபா்நகரைச் சோ்ந்த அப்துல் ரெஹ்மான் மூலம் இந்த சரக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பஞ்சாபில் உள்ள மற்றொரு கூட்டாளிக்கு வழங்க திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, அப்துல் ரெஹ்மான் மற்றும் ரவி காா்க் மாா்ச் 13 அன்று கைது செய்யப்பட்டனா். முசாபா்நகரில் உள்ள அவா்களின் வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் எட்டு கிலோ எடையுள்ள 2,000 ரெக்ஸோஜெசிக் (புப்ரெனோா்பைன்) ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
தில்லியில் போலி கடன் மோசடி: 4 போ் கைது

ரோகிணியில் துப்பாக்கிச் சூடு: தில்லு கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

