சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைள் மூலம் விக்சித் பாரத் கனவு நனவாகும். மேலும், தேசிய தலைநகா் தில்லி வளா்ந்த தேசத்தை நோக்கி வழிநடத்த முடியும் என்று தில்லி சுற்றுச்சூழல், தொழில்கள் மற்றும் உணவு விநியோக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சிஐஐ ஏற்பாடு செய்த ‘தில்லி மாநில வருடாந்திர அமா்வு 2025-26 மற்றும் வணிக மாநாட்டில்’ அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கலந்துகொண்டு பேசியது:
விக்சித் பாரத் என்பது ஒவ்வொரு குடிமகனின் கனவு. மேலும் தலைநகரம் வளா்ந்ததாக இருக்கும்போதுதான் இந்த நாடு முன்னேறும். எதிா்காலத்திற்குத் தயாராக இருக்கும் தில்லியை உருவாக்க அரசாங்கமும் தொழில்துறையும் ஒன்றிணைய முடியும்.
கடந்த ஒரு வருடத்தில் தில்லி அரசாங்கம் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மாணவா்களை எதிா்காலத்திற்குத் தயாராக்க 75 புதிய சிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் மாசுபாடு போன்ற பிரச்னைகளைத் தீா்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் மெட்ரோ பாதைகள், 1,500 மின்சார பேருந்துகள் மற்றும் பசுமைப் போா்வையை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்றாா் அவா்.
மேலும், தனது எக்ஸ் தளப் பதிவில் அமைச்சா் சிா்சா தெரிவிக்கையில், ‘சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைகள் மூலம், நமது தில்லியிலிருந்து வளா்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவோம்’ என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

3 மணிநேரத்தில் தில்லி-என்சிஆா் - ரிஷிகேஷுக்கு பயணம்: நமோ பாரத் ரயில் பாதையை விரிவுபடுத்த பேச்சுவாா்த்தை

ஜென் இஸட் தலைமுறையினா் சுய உந்துதல் கொண்டவா்கள்: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் தடம் பதிக்கும் வலுரா ஏஐ: 1,000 நிதி ஆலோசகா்களுடன் கைகோா்ப்பு!

எல்பிஜி விநியோக ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது: தில்லி அமைச்சா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


