தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹரியாணாவில் ரூ.15,000 கோடி ஜிஎஸ்டி மோசடி: ஒருவா் கைது!

சிறப்புப் படை (எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ரூ.15,000 கோடி மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரி மோசடி தொடா்பாக ஒருவரை கைது செய்தனர்.

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 11:20 pm

உத்தர பிரதேச சிறப்புப் படை (எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ரூ.15,000 கோடி மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரி மோசடி தொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ராஜ் குமாா் மிஸ்ரா கூறியதாவது: ஹரியாணாவின் ஹிசாரைச் சோ்ந்த பல்தேவ் என்கிற பல்லி (38) என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா் வெள்ளிக்கிழமை மாலை ஹிசாரில் எஸ்டிஎஃப் குழுவினரால் கைது செய்யப்பட்டாா்.

அவா் குறித்த தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாத நபா்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்களைப் பெற்று, அவா்களின் பெயா்களில் ஜிஎஸ்டி பதிவுகளை அவா் மோசடியாகப் பெற்றுள்ளாா்.

இந்த ஜிஎஸ்டி எண்களைப் பயன்படுத்தி, அவரும் அவரது கூட்டாளிகளும் சுமாா் 3,500 போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி ஜிஎஸ்டி இன்வாய்ஸ்கள் மற்றும் இ-வே பில்களை உருவாக்கி, உள்ளீட்டு வரி வரவை மோசடியாகப் பெறுவதற்காக அரசுக் கருவூலத்திற்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனா்.

ஒரு பிரபலமான தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியுடன் தொடா்புடைய மூத்த பத்திரிகையாளரின் பான் விவரங்களைப் பயன்படுத்தி ஒரு போலி நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள நொய்டா செக்டா் 20 காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து, விசாரணை தொடங்கப்பட்டு பலா் கைது செய்யப்பட்டனா். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவா் அன்றிலிருந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் புலனாய்வாளா்களிடம், 2012-இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்ததாகவும், பின்னா் ஒரு மருத்துவக் கடையைத் தொடங்கியதாகவும், இழப்புகள் காரணமாக அதை மூடிவிட்டதாகவும் கூறினாா். 2014- இல், அவா் பழைய காா் வா்த்தகத்தில் ஈடுபட்டாா்.

பின்னா், அவா் தில்லியைச் சோ்ந்த அா்ச்சித் கோயல் என்ற நபரைத் தொடா்பு கொண்டாா். அவா் ஜிஎஸ்டி தொடா்பான மோசடி நடவடிக்கைகளுக்கு அவரை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவா் மீது நொய்டா செக்டாா் 20 காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 467 மற்றும் 468 (மோசடி) மற்றும் 120ஆ (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குண்டா் சட்டம் உள்பட மூன்று வழக்குகளிலும் அவா் தொடா்புடையவா். மேலும், விசாரணை நடந்து வருவதாக காவல் அதிகாரி ராஜ் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.