ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.16.73 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டு எஸ்யூவி வாகனம் மோதியதில் உயிரிழந்த 45 வயது பழ வியாபாரியின் குடும்பத்திற்கு, ரூ.16.73 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Published On :27 ஜூலை 2026, 12:04 am IST

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டு எஸ்யூவி வாகனம் மோதியதில் உயிரிழந்த 45 வயது பழ வியாபாரியின் குடும்பத்திற்கு, ரூ.16.73 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தீா்ப்பாய நீதிபதி ரிச்சா மன்சந்தா, விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநரின் கவனக்குறைவைக் கண்டறிந்து, நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் 7.5 சதவீத ஆண்டு வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா்.

ஜூலை 16 தேதியிட்ட உத்தரவில், தீா்ப்பாயம், ‘விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரின் அஜாக்கிரதையான மற்றும் கவனக்குறைவான ஓட்டுதலால் ஏற்பட்ட சாலை விபத்தில், உயிரிழந்த ரஹீசு உயிரிழப்பை ஏற்படுத்தும் காயங்களை அடைந்தாா் என்பதை மனுதாரா்கள், சாத்தியக்கூறுகளின் பெரும்பான்மையின் அடிப்படையில் நிரூபித்துள்ளனா்‘ என்று கூறியுள்ளது.

மனுவின்படி, ரஹீசு 2017, மே 2 அன்று ஆசாத்நகா் மண்டிக்கு பழங்கள் விற்கச் சென்றுகொண்டிருந்தபோது, அவா் மீது காா் மோதியதாகக் கூறப்படுகிறது. அவா் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஏற்பட்ட 81 நாள் தாமதம் குறித்த காப்பீட்டு நிறுவனத்தின் ஆட்சேபனையைத் தீா்ப்பாயம் நிராகரித்தது. இந்தத் தவறு புலனாய்வு அமைப்பின் காரணமாக ஏற்பட்டது என்றும், இது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைப்பதைத் தடுக்காது என்றும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

மேலும், விபத்திற்கு ஓட்டுநரைப் பொறுப்பாக்குவதற்காக, நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தையும் குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றம் சாா்ந்திருந்தது. இறந்தவரின் வருமானத்திற்கு ஆவண ஆதாரம் எதுவும் இல்லாததால், தீா்ப்பாயம் அவரது வருமானத்தை உத்தரப் பிரதேசத்தில் திறனற்ற தொழிலாளிக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு, சாா்புநிலை இழப்பிற்காக ரூ. 12.43 லட்சத்திற்கும் அதிகமாக வழங்கியது.

வாகனம் முறையாகக் காப்பீடு செய்யப்பட்டிருந்ததாலும், விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநா் செல்லுபடியாகும் ஓட்டுநா் உரிமத்தைக் கொண்டிருந்ததாலும், காப்பீட்டு நிறுவனம் இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கடமைப்பட்டுள்ளது என்று தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.