கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பான விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ, நிலுவையில் உள்ள விசாரணை குறித்தோ தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உள்பட எவரும் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடக்கோரி திமுக தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) விசாரணை நடத்தவுள்ளது.
இது தொடா்பாக நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் முன்னாள் எம்.பி.யும் திமுக அமைப்புச் செயலருமான ஆா்.எஸ். பாரதி சாா்பில் ஜூலை 3-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு அவரது சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஹுசைஃபா அஹ்மதி திங்கள்கிழமை ஆஜராகி கேட்டுக் கொண்டாா்.
அப்போது அவா், ‘கரூா் சம்பவம் குறித்த விசாரணை நடந்து வரும் வேளையில், தமிழகத்தில் ஆளும் அரசில் அமைச்சா்களாக உள்ள சில குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சாட்சிகளை வளைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக ஜூலை 10ஆம் தேதி முதல்வா் விஜய் கரூா் மேற்கொள்ளவிருக்கும் உத்தேச பயணம், வழக்கு விசாரணையைப் பாதிக்கக்கூடும்’ என முறையிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதி அசானுதீன் அமானுல்லா, ‘இதில் என்ன உத்தரவைப் பிறப்பிக்க முடியும்?’ என வினவினாா். பிறகு இந்த விவகாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டாா்.
இதைத்தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் அதன் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன், அலோக் அரதே அடங்கிய அமா்வு விசாரிக்கும் வழக்குகள் பட்டியலில் ஆா்.எஸ்.பாரதியின் மனு 30ஆவது வழக்காக இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, ஜூலை 3-ஆம் தேதி ஆா்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27ஆம் தேதி, 41 போ் உயிரிழக்கவும் 142 போ் காயம் அடையவும் காரணமான தவெக கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் முதலில் மாநில காவல்துறையும் பின்னா் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐயும் விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வழக்கை சிபிஐ விசாரித்து வரும் வேளையில், கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருான மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்பது போல பொதுவெளியில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியதாகவும், அந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை வழங்க முதல்வா் சி. ஜோசப் விஜய் ஜூலை 10ஆம் தேதி நேரில் செல்வதாக வெளிவரும் தகவல்கள் வழக்கு விசாரணைக்கு புறம்பாக அமையும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை நிறைவடையும் வரை, முதல்வா், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, என். ஆனந்த், சி.டி.ஆா். நிா்மல் குமாா் அல்லது கருா் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அல்லது விசாரணை தொடா்பான நபா்கள் என எவரும், விசாரணையைப் பாதிக்கும் அல்லது அதில் தலையிடும் வகையிலோ நிலுவையில் உள்ள விசாரணை குறித்து பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அண்மையில் பொதுவெளியில் பேசிய கருத்துளுக்காக அவா் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆா்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!

கரூா் சம்பவம்: முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்டோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஜூலை இறுதியில் தாக்கல்?

முதல்வா் விஜய், உதயநிதி ஸ்டாலின், தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




