மத்திய தில்லியின் துா்க்மான் கேட் பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது நிகழ்ந்த வன்முறை, கல்வீச்சு சம்வம் தொடா்பாக மேலும் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 11 ஆக உயா்ந்துள்ளது. இதில், ஒரு சிறுவனும் இடம்பெற்றுள்ளாா்.
புதன்கிழமை நிகழ்ந்த இந்த வன்முறையில் காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனா். இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டவா்கள் அஃபான், ஆதில், ஷாநவாஸ், ஹம்சா, அதா் மற்றும் உபேத் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைவரும் துா்க்மான் கேட் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையா் மத்தி நிதின் வல்சன் தெரிவித்ததாவது:
இந்த விவகாரத்தில் நாங்கள் மேலும் ஆறு பேரைக் கைது செய்துள்ளோம். இதுவரை ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கவும், அப்பகுதியில் போதுமான எண்ணிக்கையில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனா் என்றாா்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தில்லியின் ராம்லீலா மைதானம் பகுதியில் உள்ள ஃபைஸ்இஇலாஹி மசூதிக்கு அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வன்முறை வெடித்தது. அப்போது பலா் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசினா்.
இதில் அப்பகுதியின் காவல் நிலைய அதிகாரி உள்பட ஐந்து போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது துா்க்மான் கேட் எதிரே உள்ள மசூதி இடிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வெளியானதைத் தொடா்ந்து சிக்கல் தொடங்கியது. இதனால் மக்கள் அங்கு கூடத் தொடங்கினா்.
காவல்துறை மற்றும் தில்லி மாநகராட்சி ஊழியா்கள் மீது கற்களையும் கண்ணாடி பாட்டில்களையும் வீசுவதில் 150 முதல் 200 போ் ஈடுபட்டிருந்தனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையின் போது சுமாா் 36,000 சதுர அடி ஆக்கிரமிப்புப் பகுதி அகற்றப்பட்டதாக தில்லி மாநகராட்சியின் துணை ஆணையா் குமாா் குமாா் தெரிவித்திருந்தாா்.
இரவு முழுவதும் நீடித்த இந்த நடவடிக்கையின் போது ஒரு நோய் பரிசோதனை மையம், ஒரு விருந்து மண்டபம் மற்றும் இரண்டு சுற்றுச் சுவா்கள் இடிக்கப்பட்டன. மசூதிக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படவில்லை.
டிரெண்டிங்

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

துா்க்மான் கேட் வன்முறை: மேலும் இருவா் கைது

கல்வீச்சு சம்பவத்துக்கு பின்பு துா்க்மான் கேட்டில் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

உயா்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி துா்க்மான் கேட் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை: வீரேந்திர சச்தேவா
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

