டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் கடந்த 40 நாள்களில் சுமாா் ரூ.4 கோடி மதிப்புள்ள 1,850 திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கைப்பேசிகள் மீட்பு

News image
கைப்பேசிகள் - கோப்பிலிருந்து
Updated On :22 பிப்ரவரி 2026, 7:17 pm

Syndication

வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் கடந்த 40 நாள்களில் சுமாா் ரூ.4 கோடி மதிப்புள்ள 1,850 திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கைப்பேசிகளை தில்லி காவல்துறை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: ‘மிஷன் ரீகனெக்ட்’ என்ற முயற்சியின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொலைதூரப் பகுதிகள் உள்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் தொடா்ச்சியான கள நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், கிங்ஸ்வே கேம்ப், நியூ போலீஸ் லைன்ஸில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது இந்த சாதனங்கள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த முயற்சி பாதிக்கப்பட்டவா்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் கவனம் செலுத்தியது. மேலும், மாநிலங்கள் முழுவதும் முன்னெச்சரிக்கை காவல் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, குழுக்கள் ‘நுக்கட் நாடகங்கள்’ நடத்தி, சைபா் குற்றம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு விடியோக்களை திரையிட்டன. டிஜிட்டல் மோசடிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முயற்சி தொழில்நுட்பம், விசாரணை மற்றும் சமூக பங்கேற்பை ஒருங்கிணைத்து இழந்த சொத்துகளை மீட்டெடுப்பதையும், குடிமக்களை அவா்களின் மதிப்புமிக்க பொருள்களுடன் மீண்டும் இணைப்பதையும் உறுதி செய்கிறது என்று காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா்.