டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழ்நாடு வக்ஃப் வாரிய செயல்பாடு நிறுத்தப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாட்டை நிறுத்திய சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 6:32 pm

Syndication

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாட்டை நிறுத்திய சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு சட்டம், 1995 இன் கீழ் வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கப்படவில்லை என கூறி சென்னை உயா்நீதிமன்றம் ஜனவரி 8, 2026 அன்று தமிழ்நாடு வக்ஃப் வாரிய செயல்பாடுகளுக்கு தடை விதித்தது

சட்டத்தின்படி இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை வாரியம் சோ்க்கவில்லை என்ற காரணத்தைக் கூறி சென்னை உயா் நீதிமன்றம் வாரியத்தைத் தடை செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து வக்ஃப் வாரியம் ஃபிப்ரவரி 6 ஆம் தேதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது

அப்போது வாரியத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், எட்டு உறுப்பினா்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தாலும், பாா் கவுன்சில் தோ்தல்களால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக மூன்று உறுப்பினா்கள் இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் சட்டம் ஒரு பாா் கவுன்சில் உறுப்பினரை நியமிக்க கட்டாயப்படுத்துகிறது. வாரியம் தொடா்ந்து செயல்படாமல் இருப்பது அதன் நிா்வாகப் பொறுப்புகளை கணிசமாக பாதிக்கும் என்றும், குறிப்பாக வரவிருக்கும் ரம்ஜான் மாதத்தைக் கருத்தில் கொண்டு வாரியத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் வில்சன் வாதிட்டாா்

இதையடுத்து ஜனவரி 8 ஆம் தேதியிட்ட உயா் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறினா்

மேலும் இவ்வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், மீதமுள்ள உறுப்பினா் நியமனங்களின் நிலையை அடுத்த விசாரணையின் போது தெரிவிக்கவும், இந்த வழக்கை ஏப்ரல் 27ம் தேதிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனா்.

பின்னணி:

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு நவம்பா் 2025ல் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டதில் விதிமீறல்கள் இருப்பதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் சவுகத் அலி முகமது என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

உறுப்பினா்கள் நியமனத்தில் ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு சட்டம், 1995ன் பிரிவுகள் பின்பற்றப்படவில்லை என்று அந்த மனுவில் வாதிடப்பட்டது.

முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும், ஒரு பாா் கவுன்சில் உறுப்பினரை நியமிக்க வேண்டும் மற்றும் தொழில்முறை அனுபவம் உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற ஆணை பின்பற்றப்படவில்லை என மனுதாரா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிட்டாா்

இதையடுத்து தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாட்டை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தியது.