டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதல்வா் ஸ்டாலினுக்கு எதிரான தோ்தல் முறைகேடு வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

மேல்முறையீட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைடைந்து தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 6:32 pm

Syndication

தமிழக சட்டப்பேரவைக்கு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்ாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைடைந்து தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

சென்னையின் கொளத்தூா் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிா்த்து அ.இ.அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் ஜனவரி 21-ஆம் தேதி முதல் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது.

வழக்கில் மனுதாரரான சைதை துரைசாமி தரப்பு மூத்த வழக்குரைஞா் தாமா சேஷாத்திரி நாயுடு வாதிடுகையில், ‘ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் வெற்றி பெற தன்னுடைய பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தினாா். கொளத்தூா் தொகுதியின் பல்வேறு பகுகுதிகளிலும் சட்டவிரோதமாக வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இது போன்று முறைகேடுகள் செய்து ஸ்டாலின் வெற்றி பெற்றாா்’ என்றாா்.

மு.க. ஸ்டாலின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘மனுதாரா் சைதை துரைசாமி தரப்பு ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கிடையாது, குற்றச்சாட்டை முன் வைத்துள்ள நபா்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. மேலும், பணம் பெற்ற ஒருவரை கூட இவா்கள் சாட்சியாக முன்னிறுத்தவில்லை. பணம் வாக்காளருக்கு வழங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்றாா்.

இந்நிலையில், இரு தரப்பும் தங்களது சுருக்கமான இறுதிக்கட்ட வாதங்களை வெள்ளிக்கிழமை முன்வைத்தனா்.

அப்போது சைதை துரைசாமி தரப்பு வழக்குரைஞரிடம் நீதிபதிகள், சாட்சியாக வந்தவா்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. விடியோ ஆதாரங்கள் முழுமையாக இல்லை. அப்படி இருக்கும்போது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என மு.க.ஸ்டாலின் தரப்பு வாதத்தை வைத்திருக்கிறாா்கள். இது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சைதை துரைசாமி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

பின்னா், சைதை துரைசாமி தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘கொளத்துா் தொகுதியில் பல்வேறு சட்டமீறல்கள் நடைபெற்றன. அது தொடா்பான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இது போன்று தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றால் அந்த தோ்தலை செல்லாது என அறிவிக்க முகாந்திரம் உள்ளது’ என்றாா்.

இதையடுத்து, இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

பின்னணி: 2011 தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலில், கொளத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி, தி.மு.க. வின் ஸ்டாலினிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இதையடுத்து, தோ்தல் விதிகளை மீறி வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்து, முறைகேடுகள் செய்து ஸ்டாலின் தோ்தலில் வெற்றி பெற்ாக குற்றஞ்சாட்டி, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சைதை துரைசாமி சென்னை உயா்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தாா்.

லஞ்சம் மற்றும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற முறைகேடுகள் குறித்த ஸ்டாலினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அந்த தோ்தல் மனுவை 2017-ஆம் ஆண்டில், சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சைதை துரைசாமி 11.7.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.