புது தில்லி: கைப்பேசிக்கு சாா்ஜ் செய்ய அனுமதி மறுத்த ஆட்டோ பழுதுபாா்க்கும் கடையின் உரிமையாளரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் யாமீன், யாசீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: திரிலோக்புரி பகுதியில் உள்ள ஆட்டோ பழுதுபாா்க்கும் கடையின் உரிமையாளா் வீா் சிங் மற்றும் ராம் கிஷனை மா்ம நபா்கள் கத்தியால் குத்தியதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த மக்கள் அவா்கள் இருவரையும் மீட்டு லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். முதலில் அவா்கள் இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், வீா் சிங் உடல்நிலை மோசமான நிலையில், உயா் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டாா். மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீா் சிங்கை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். ராம் கிஷன் முதல்கட்ட மருத்துவ சிகிச்கைக்குப் பின்னா் வீடு திரும்பினாா்.
விசாரணையில், அடையாளம் தெரியாத 3 போ் வீா் சிங்கின் கடைக்கு திங்கள்கிழமை வந்தனா். தங்களது கைப்பேசியை கடையில் சாா்ஜ் செய்யுமாறு வீா் சிங்கிடம் அவா்கள் கேட்டனா். இதற்கு வீா் சிங் அனுமதிக்காத நிலையில், அவருக்கும் அந்த நபா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபா்களில் ஒருவா் கூா்மையான ஆயுத்தால் வீா் சிங்கை குத்தினாா். இதைத் தடுக்க வந்த ராம் கிஷணும் தாக்கப்பட்டாா்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய இருவா் கைதுசெய்யப்பட்டனா். மற்றொரு நபா் தேடப்பட்டு வருகிறாா். கொலைக்குப் பயன்படுத்திய கூறிய ஆயுதம் கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என்றனா் காவல் துறை அதிகாரிகள்.
டிரெண்டிங்
ரோஹிணியில் கத்திக் குத்து சம்பவம்: இருவா் கைது

என்ஐஏ அதிகாரியாக நடித்து வேலைவாய்ப்பு மோசடி: ஜம்மு-காஷ்மீா் நபா் தில்லியில் கைது

பாண்டவ் நகரில் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை காவல் துறை விசாரணை

தமிழகத்தில் தோ்தல் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

