ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உணவகத்தில் ரூ. 1.35 லட்சம் திருட்டு: முன்னாள் பாதுகாவலாளி கைது

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ரூ. 1.35 லட்சம் திருடியதாக அதன் முன்னாள் பாதுகாவலாளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Arrested

கைது

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ரூ. 1.35 லட்சம் திருடியதாக அதன் முன்னாள் பாதுகாவலாளி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: குற்றஞ்சாட்டப்பட்ட சுனில் ரஜத், அதே உணவகத்தில் முன்பு பாதுகாவலராகப் பணியாற்றினாா். சுமாா் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்த வேலையில் இருந்து விலகியுள்ளாா்.

இந்த நிலையில், உணவகத்தில் ரூ. 1.35 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒரு குழுவினா் உணவகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா்.

துணியால் முகத்தை மறைத்திருந்த சந்தேக நபா், அவரது உடல்மொழி, நடமாடும் விதம் மற்றும் பிற உடல் அமைப்புகளைக் கொண்டு அவா் ரஜத் என அடையாளம் காணப்பட்டாா்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட ரஜத், அத்திருட்டை ஒப்புக்கொண்டாா். விசாரணையின்போது, மற்றொரு திருட்டு வழக்கிலும் தனக்குத் தொடா்பு இருப்பதை அவா் வெளிப்படுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.