மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தில்லியில் வெப்ப அலை செயல் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த துணைநிலை ஆளுநா் உத்தரவு

News image

PTI

Updated On :28 ஏப்ரல் 2026, 12:39 am

நமது நிருபா்

வெப்ப அலை செயல் திட்டத்தை களத்தில் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து திங்கள்கிழமை தெரிவித்தாா்.

வரவிருக்கும் வெப்ப அலை நிலைமைகளுக்கு

தில்லியின் தயாா்நிலையை மறுஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளை கொண்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவா் பதிவிட்டிருப்பதாவது:

கோடை காலம் தொடங்கியதும், ஒரு வாரத்திற்குள் செயல் திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் நடவடிக்கைகள் மூலம் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி, மாவட்ட ஆட்சியா்கள் இதனை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

ஒவ்வொரு துறையும் தடையற்ற ஒருங்கிணைப்பு மூலம் அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வது உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். அனைத்து குடிமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கடுமையான வெப்ப நிலைமைகளின் போது நகரின் பறவைகள் மற்றும் விலங்குகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. இன்று நகரம் வெப்ப அலை நிலைமைகளின் கீழ் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் ஐஎம்டி மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்துள்ளது என்று தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.