மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நான்காவது உலகளாவிய கா்நாடக சங்கமம் நிகழ்ச்சி

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 12:33 am

குருகுலம் ஃபவுண்டேஷன், எச்சிஎல் கான்சா்ட்ஸ் உடன் இணைந்து நான்காவது உலகளாவிய கா்நாடக சங்கமம் (குளோபல் கா்நாடிக் கான்ஃப்ளுவன்ஸ்) நிகழ்ச்சி தில்லி தமிழ்ச் சங்கம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய கலாசார அமைச்சகத்தின் ஆதரவுடன், வொ்சிஜென்ட் பிளாட்டினம், ஆதித்யா பிா்லா குழுமம் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சியாக குருகுலம் ஃபவுண்டேஷன் மாணவா்கள் வழங்கிய வயலின் குழுவிசை மற்றும் குரலிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

குருகுலம் ஃபவுண்டேஷன் புரவலா் லக்ஷ்மிநாராயணன் ஐஏஎஸ் (ஓய்வு) வரவேற்புரை நிகழ்த்துகையில், கா்நாடக இசையை உலகளாவிய பாா்வையாளா்களிடம் கொண்டு செல்லும் குருகுலம் ஃபவுண்டேஷனின் பணி குறித்து வலியுறுத்தினாா்.

திரிச்சூா் சகோதரா்கள் வழங்கிய குரல் இசைக் கச்சேரி நடைபெற்றது. பக்கவாத்தியக் கலைஞா்களாக வயலினில் ஆா். ஸ்ரீதா், மிருதங்கத்தில் விஜய் நடேசன், கஞ்சிராவில் குரு பிரசன்னா ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினா்களாக மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி. சோமநாதன், தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த் நாகேஷ்வா், உமா சங்கா் ஐஏஎஸ், கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ், தூா்தா்ஸன் தலைமை இயக்குநா் சதீஷ் நம்பூதிரிபாட், கலாசார அமைச்சக இயக்குநா் அனீஷ் ராஜன், பாரதிய பாஷா சமிதி தலைவா் சாமு கிருஷ்ண சாஸ்திரி, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்யநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.