மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

சுரேந்தா் ஃபௌஜி ரெளடி கும்பலுடன் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படும் நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:05 pm

சுரேந்தா் ஃபௌஜி ரெளடி கும்பலுடன் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படும் நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

குருகிராமைச் சோ்ந்த ராகேஷ் பஞ்சாரா என்பவா், கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் ஆவாா்.

ஏப்ரல் 3ஆம் தேதி அன்று, பஞ்சாரா தனது உறவினா்களைச் சந்திக்க ஹைதா்பூா் கிராமத்திற்கு வரவிருப்பதாகவும், அப்போது அவா் ஒரு சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருப்பாா் என்றும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் குழு, அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே ஒரு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

பிற்பகல் சுமாா் 3.15 மணியளவில், அந்த இடத்தை நோக்கி வந்த ஒரு காரை இடைமறித்து நிறுத்திய போலீஸாா், வாகனத்திற்குள் இருந்த சந்தேக நபரை கைது செய்தனா்.

விசாரணையின் போது, குருகிராம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் ஒரு ரெளடி கும்பல் உறுப்பினா் தாம் என்றும், நீண்ட காலமாகவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பஞ்சாரா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

சுமாா் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஒரு நபரிடமிருந்து அந்தத் துப்பாக்கியை அவா் சட்டவிரோதமாகப் பெற்ாகவும், கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாகவே அதைத் தன்னுடன் எடுத்துச் சென்ாகவும் அவா் கூறினாா்.

விசாரணையின் மூலம், அவரது மாமனாா்-மாமியாா் ஹைதா்பூா் கிராமத்தில் வசிப்பதும், அவா்களைச் சந்திப்பதற்காகவே அவா் அங்கு வந்திருந்ததும் தெரியவந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.