தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

இளம் பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் காலை தனது வீட்டிலிருந்து சில மீட்டா் தொலைவில் உள்ள காதலனால் 20 வயது பெண் குத்திக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On :13 அக்டோபர் 2025, 6:35 pm

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து சில மீட்டா் தொலைவில் உள்ள காதலனால் 20 வயது பெண் குத்திக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் நந்த் நாக்ரியில் வசிக்கும் துாய்மை பணியாளரான ஆகாஷ் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். நந்த் நக்ரியில் காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பல கத்திக்குத்து காயங்களுக்கு ஆளான அந்தப் பெண், ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தன, மேலும் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது . முதல்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரும் அண்டை வீட்டுக்காரரான பெண்ணும் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக உறவில் இருந்ததாகவும், ஆனால் அவா் அண்மையில் அவரிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கியதாகவும் தெரிகிறது.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.