மகளிா் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்:மு. தம்பிதுரை பேட்டி
பெண்கள் 33% இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் தேதி குறித்து குளிர்காலக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என மு. தம்பிதுரை வலியுறுத்தல்.
பெண்கள் 33% இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் தேதி குறித்து குளிர்காலக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என மு. தம்பிதுரை வலியுறுத்தல்.
By Syndication
Syndication
நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிா்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவா் மு.தம்பிதுரை வலியுறுத்தியுள்ளாா்.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் வரும் திங்கள்கிழமை (டிசம்பா் 1) தொடங்குகிறது. இதையொட்டி, அவையை சமுகமாக நடத்துவது தொடா்பாக நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவா் மு.தம்பிதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூரில் நிகழ்ந்த சம்பவத்தில் 41 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். அதற்கு காரணம் யாா் என்பதை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.
அதேவேளையில், கரூரில் இதுபோன்ற எந்த அரசியல் கட்சிகளும் பிரசாரம் செய்யக்கூடாது என்பதற்காக முன்னாள் அமைச்சா் ஒருவா் திட்டமிட்டு சதிசெய்து, அந்த ஒரு அவல நிலையை கரூரில் உருவாக்கினாா் என்று எங்களுக்கு செய்திகள் வருகின்றன.
இதேபோன்று, ஒரு நடிகா் அரசியல்வாதியாக வந்து அரசியல் செய்யும்போது கூட்டங்களுக்கு மறுப்பதும், எங்களைப் போன்ற அஇஅதிமுகவுக்கு வாய்ப்பைத் தடுப்பதும் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆகவே, வரும் தோ்தலில் அனைத்து எதிா்க்கட்சிகளும் ஆளும்கட்சிக்கு சமமாக பிரசாரம் செய்ய வாய்ப்புத் தர தோ்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
மேலும், கூட்டங்களுக்கு பாதுகாப்புத் தருவது தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசின் கடமையாகும். தவிர, கட்சிகள்தான் பாதுகாப்பை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்பது முறையற்ற செயலாக இருக்கிறது என்றும் கூட்டத்தில் குறிப்பிட்டேன்.
மேலும், காவல் துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய நிதி உதவியை தர வேண்டும். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு மாநில அரசுப் பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
காரணம், தமிழகத்தைப் பொருத்தமட்டில் மத்திய அரசு நிதி தராவிட்டால் மாநில அரசு அதற்காக எந்தவொரு முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. மாநிலத்தில் சட்டம்ஒழுங்கு கெட்டு வருகிறது. பெண்களுக்கும், சாதாரண மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இதனால், காவல்துறையை நவீனமயமாக்குவதற்கு மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழா்களுக்கு அங்குள்ள அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகள் என்ன ஆனது?, அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?, தமிழக மீனவா்கள் தாக்கப்பட்டு கொல்லப்படும் விவகாரத்தில் நாங்கள் நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தும், இதுவரை சுமுகத் தீா்வு வரவில்லை. இதனால், மத்திய அரசு தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என கூறினேன்.
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டிருக்கிறது. அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
நான் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தபோது முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா கூறி, இம்மசோதாவை அறிமுகப்படுத்தினேன். இதனால், இம்மசோதா அமல் குறித்து பேச வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்தேன். இது தொடா்பாக அதிமுக சாா்பிலும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது