போலி மதுபானம் விநியோகம்: தலைமறைவு நபா் கைது
போலி மதுபான விநியோக வலையமைப்பையும், போலி பிராண்டட் ஸ்டிக்கா்கள் மற்றும் க்யூஆா் குறியீடுகளை தயாரிக்கும் தொழிற்சாலையையும் நடத்தி வந்ததாகக் கூறப்படும் தலைமறைவு நபர் கைது
போலி மதுபான விநியோக வலையமைப்பையும், போலி பிராண்டட் ஸ்டிக்கா்கள் மற்றும் க்யூஆா் குறியீடுகளை தயாரிக்கும் தொழிற்சாலையையும் நடத்தி வந்ததாகக் கூறப்படும் தலைமறைவு நபர் கைது
By Syndication
Syndication
போலி மதுபான விநியோக வலையமைப்பையும், போலி பிராண்டட் ஸ்டிக்கா்கள் மற்றும் க்யூஆா் குறியீடுகளை தயாரிக்கும் தொழிற்சாலையையும் நடத்தி வந்ததாகக் கூறப்படும் தலைமறைவு நபரை தில்லி போலீசாா் திங்கள்கிழமை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஹரியானாவைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் குமாா், உள்ளூா் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாக அவா் கூறினாா்.
நவம்பா் 24 ஆம் தேதி, ராஜஸ்தானின் பிகானரில் குமாா் பதுங்கியிருப்பதாக குற்றப்பிரிவு குழுவிற்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு அருகில் காவல்துறை குழு நிலைகொண்டு குமாா் வந்தபோது அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது.
விசாரணையின் போது, குமாா் முன்பு ஒரு மதுக்கடை நடத்தி வந்ததாகவும், உரிமம் பெறத் தவறியதால் தில்லி மற்றும் ஹரியானாவில் கள்ளச்சாராயம் சப்ளை செய்யத் தொடங்கியதாகவும் மனோஜ் குமாா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவா் ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு இதேபோன்ற வழக்கில் ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
விடுதலையான பிறகு, குமாா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து மீண்டும் சட்டவிரோத மதுபானங்களை விநியோகிக்கத் தொடங்கியதாகவும், தில்லியின் பேகம்பூரில் ஒரு அச்சிடும் தொழிற்சாலையை நிறுவி, பிரீமியம் மதுபான பிராண்டுகளின் போலி மூடிகள், ஸ்டிக்கா்கள் மற்றும் லேபிள்களை தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் குமாா் தலைமறைவாகி, கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அடிக்கடி இடங்களை மாற்றி வந்த நிலையில், காவல்துறை அவரை கைது செய்தது. மனோஜ் குமா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியைச் சந்திக்க பிகானருக்கு வந்ததாகக் கூறும்போது, கைது செய்யப்பட்டாா். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது