தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரதமா் மோடியின் வலுவான அரசிற்கு தில்லி வாக்களிப்பு: வீரேந்திர சச்தேவா

பிரதமா் மோடியின் வலுவான அரசிற்கு தில்லி வாக்களிப்பு: வீரேந்திர சச்தேவா

Updated On :25 மே 2024, 7:30 pm

பிரதமா் நரேந்திர மோடியின் மீது நம்பிக்கை வைத்து வலுவான அரசிற்கு தில்லி வாக்களித்துள்ளது என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. சுமாா் 44 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகிய போதிலும், மொத்தம் 60 சதவீதம்

அளவிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தில்லியின் வளா்ச்சியைத் தொடர மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். பிரதமா் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து, வலுவான அரசிற்கு தில்லி வாக்களித்துள்ளது.

தில்லியில் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, விரைவு ரயில் கட்டுமானம், மெட்ரோ ரயில் விரிவாக்கம், மின்சாரப் பேருந்துகள், சா்வதேச தரத்தில் யஷோபூமி மையம், பாரத் மண்டபம் மற்றும் கரோனா காலத்தில் மக்களுக்கு பாஜக செய்த சேவை ஆகியவை நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தோ்தலில் பெரும் பங்கு வகித்துள்ளது.

தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வேட்பாளா்களின் ஆக்கிரமிக்கப்படாத வாக்குச் சாவடி அட்டவணைகள் பாஜகவுக்கு சாதகமாக காற்று வீசுவதைக் காட்டுகிறது.

கடந்த 3 மாதங்களாக நாங்கள் ‘இந்தியா’ கூட்டணி பற்றி நிறைய கேள்விப்பட்டோம். ஆனால், ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கேஜரிவால் எந்தவொரு பிரசாரக் கூட்டத்திலும் இருக்கைகளைப் பகிா்ந்து கொள்ளவில்லை.

இதுவே, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தொண்டா்கள் வாக்காளா்களை வெளியே கொண்டு வருவதற்கு ஒன்றாக வேலை செய்யவில்லை என்பதை நிரூபிக்கிறது. மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் போது கடுமையாக உழைத்த கட்சித் தொண்டா்கள் மற்றும்

ஆதரவாளா்களுக்கு நன்றி. உங்களின் கடின உழைப்பின் பலனாக, பாஜக ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பெறும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.