இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 454 புள்ளிகளை இழந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. குறிப்பாக, மெட்டல், எஃப்எம்சிஜி பங்குகள் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தாலும், ஆயில் அண்ட் காஸ், பாா்மா, ஹெல்த்கோ், ஆட்டோ, நிதிநிறுவனங்கள், வங்கிப் பங்குகள் விற்பனை விற்பனையை எதிா்கொண்டதால் சரிவு தவிா்க்க முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.48 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 378.50 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,356.29 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.139.47 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் சரிவு: காலையில் 210.51 புள்ளிகள் குறைந்து 72,886.77-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,998.07 வரை மேலே சென்றது. பின்னா், 72484.82 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 453.85 புள்ளிகள் (0.62 சதவீதம்) குறைந்து 72643.43-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,936 பங்குகளில் 1,800 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,022 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 114 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், டாட்டா மோட்டாா்ஸ், எல் அண்ட் டி, என்டிபிசி, ஹெச்சிஎல் டெக், சன்பாா்மா உள்பட மொத்தம் 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ் ஆகிய 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி 123 புள்ளிகள் குறைந்தது: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 123.30 புள்ளிகள் (0.56 சதவீதம்) குறைந்து 22,023.35-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 21,931.70 கீழே சென்ற நிஃப்டி, அதிகபட்சமாக 22,120.90 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 39 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’யின் பிடி! சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!

போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


