டெல்லி சாலையொன்றில் தன் மகளுடன் சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து இறங்கிய பெண் ஒருவரிடமிருந்து கழுத்துச் செயினை பறித்துச் செல்ல முயன்றார்கள் மோட்டார் சைக்கிள் திருடர்கள் இருவர். ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இருவரும் ரிக்ஷாவில் இருந்து இறங்கிய பெண்ணின் அருகில் வந்ததும் அவரது கழுத்துச் செயினை அறுத்துக் கொண்டு சிட்டாகப் பறக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், செயினைப் பறிகொடுத்த பெண் சற்றும் தயங்காமல் தன்னிடமிருந்து செயினைப் பறித்தவனை மோட்டார் சைக்கிளில் இருந்து இழுத்துக் கீழே தள்ளி சரமாரியாக உதைக்கத் தொடங்கினார். நடந்து கொண்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்து மனிதர்கள் உடனடியாக அந்தப் பெண்ணின் உதவிக்கு வரவே மோட்டார் சைக்கிளில் இருந்து பிடிபட்ட செயின் திருடனுக்கு பலத்த உதை கிடைத்தது. அவனிடம் பறிகொடுத்த செயினையும் அப்பெண்மணி மீட்டார். பிடிப்பட்ட திருடனை அருகிலிருந்த காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். செயினை பறிகொடுத்த பெண்மணியின் வீரத்தை பாராட்டியே தீர வேண்டும். ஏனெனில், கழுத்துச் செயினைப் பறித்துச் சென்ற திருடனைக் குறித்த பயமின்றி உடனடியாக எதிர்த்துப் போராடுவது என சடுதியில் முடிவெடுத்ததால் மட்டுமே அவரால் இழந்த செயினை மீட்க முடிந்ததுடன் திருடனையும் பிடிக்க முடிந்திருக்கிறது.
அத்துடன் மோட்டார் சைக்கிள் திருடர்களில் ஒருவன் பிடிபட்டு விட்டதால் வாகனத்தில் தப்பிச் சென்ற மற்றொருவனையும் பிடித்து விடுவதற்கான சாதகமான அம்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்காகவேனும் அந்தப் பெண்மணியையும் அவரது மகளையும் பாராட்டா விட்டால் எப்படி? தற்போது டெல்லி பெண்கள் மோட்டார் சைக்கிள் திருடனைப் பிடித்து சரமாரியாக அடித்துத் துவைத்து செயினை மீட்கும் சி சி டி வி காட்சிகள் வைரலாக இணையத்தில் பரவி வருகின்றன. இதைப் பார்த்து இப்படியான சூழலில் சிக்கிக் கொள்ளும் பலரும் துணிவு கொள்ள வேண்டும் என்பதே அனைவருக்குமான பாடம்.
நெல்லையில் கடந்த மாதம் இரவு பத்து மணி அளவில் தங்கள் வீட்டைக் கொள்ளையடிக்க வந்த திருடர்களை விரட்டிப் பிடிக்க முற்பட்ட முதிய தம்பதிகள் சம்பவத்திற்கு ஒப்பாக இந்த டெல்லி பெண்களின் வீரத்தையும் நாம் புகழ்வதே சரி. நெல்லை, கடையம் கிராமத்தைச் சார்ந்த சண்முகவேல், செந்தாமரை தம்பதியினர் வீட்டில் தனியாக இருந்த போது இரவு பத்து மணிக்கு மேல் முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் வந்து சண்முகவேலைத் துண்டால் கழுத்தை இறுக்கிக் கட்டி விட்டு வீட்டைக் கொள்ளையிட முயன்றனர். அப்போது முதியவர் அலறும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த செந்தாமரை அம்மாள், முகமூடிக் கொள்ளையர்களுக்கு அஞ்சாமல் துணிந்து தனது கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு திருடர்களைத் தாக்கி கணவரை விடுவித்ததுடன் கொள்ளையரையும் ஓட ஓட விரட்டினார்.
இதில் செந்தாமரை அம்மாளின் துணிச்சல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. இச்சம்பவத்தில் செந்தாமரை அம்மாளின் கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருந்தாலும் கூட அவர்களுக்கு இந்திய சுதந்திர தினத்தன்று வீரதீர குடிமக்கள் விருது வழங்கி கெளரவித்தது தமிழக அரசு. முதல்வர் எடப்பாடி கையால் விருது பெற்றனர் அத்தம்பதியினர்.
இப்படி நெல்லை முதல் டெல்லி வரை மக்கள் குறிப்பாகப் பெண்கள் திருடர்களையும், கொள்ளையர்களையும் எதிர்த்துப் போராடக் கிளம்பியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றமே!
Video Courtesy: Hindustan times
Related Article
சாலையில் பயமின்றி வாகனம் ஓட்டிச் செல்ல முடிகிறதா? இந்த ரூல் பிரேக்கர்களை என்ன செய்வது?
ஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை!
க்ரைம் கதைகளின் முடிசூடா மன்னன் ராஜேஷ்குமாரின் 50 ஆண்டுகால எழுத்துப்பயணம்!
பூச்செடிகள், காய்கறிச் செடிகளுடன் பேசும் வழக்கமிருக்கா உங்களுக்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெருவாரியான வாக்குப் பதிவு ஆட்சி மாற்றத்துக்கு அறிகுறி! -பிரதமா் மோடி

மொடக்குறிச்சி தொகுதி: ஆா்வத்துடன் வாக்களிக்க வந்த இளம்வாக்காளா்கள்

அவிநாசி நகருக்குள் வராத பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


