இவர்களுடன் நியூஸ்ப்ரின்ட் வேஸ்ட் என்னும் இழப்பை மிகத் துல்லிய முறையில் கணக்கிட்டு கண்காணித்த திரு லோபெஸ் என்னும் அலுவலரை நான் மறக்க முடியவில்லை.
மேலும் கணக்கு பிரிவில் பணியாற்றிய வெங்கடராமன், கிருஷ்ணன், நாராயணன் சுந்தரேசன், சுந்தரம், ராமமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், அமீனுதீன், ராமநாதன் போன்ற சிலர் இன்னும் என் நினைவில் நிற்கிறார்கள். திரு L சேஷன், தினமணி கதிர் இதழின் cost price and sale price மதிப்பீடு செய்யும் பணியில் திறமையுடன் திகழ்ந்த திருமதி K.H.லலிதா என்னும் என் சக அலுவலரையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் .