‘எனக்கு வயதாகி விட்டதால் என்னால் வேலை எதுவும் செய்ய முடியாது என்று நான் நினைக்கவில்லை. அது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் என் மகள் மோசமான காயங்களுடன் காப்பாற்றப்பட்டாள், அவளுடைய இடத்தில் இருந்து குடும்பத்தைத் தாங்க இப்போது நான் இருக்கிறேன். என்னால் பிச்சை எடுத்து உண்ண முடியாது. குடும்ப காரியங்களை நிகழ்த்த முடியாது. எனக்கு வருமானம் ஈட்ட ஒரு வேலை தேவைப்பட்டது. அப்போது தான், மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் மற்றும் துணை டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் பாவனா விளம்பே உதவியாலும், பரிந்துரையாலும் எனக்கு இந்த வேலை கிடைத்தது. வங்கிக் கடனை அடைத்து விட்டு ஒரு வீட்டை சொந்தமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய எனது ஒரே தேவை. அதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.’