இன்னைக்கும் அதே தான்... ஆமாங்க.. இன்னைக்கும் கூட நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்!
இது தப்பான வழக்கமாச்சேன்னு...
‘ரொம்ப நேரம் இப்படி எல்லாம் சும்மா சும்மா துருவினா பென்சில் கடவுள் கிட்ட போய் அழும், என் கூரான முனைகளை எல்லாம் துருவித் துருவி, மறுபடியும் புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல அழுத்தி அழுத்தி அந்த குட்டிப்பாப்பா உடைச்சு உடைச்சு விடறா! அப்புறம் திருப்பி பென்சில் கூராவே இல்லை, கூராவே இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு வலிக்க வலிக்க என் தலையை பிடிச்சு ஷார்பனர்க்குள்ள விட்டு துருவிகிட்டே இருக்கா... எனக்கு வலிக்குதே! ஐயோ கடவுளே! எனக்கு வலிக்குதே! ... இப்ப நான் என்ன செய்வேன்னு உன்னைப் பத்தி கோள் சொல்லும்னு சொல்லி வச்சேன்.
‘ம்ம்... நிஜமாவா சொல்றீங்கம்மா’ என்று கொஞ்ச நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவள்...
‘கடவுள் நல்லவர், அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டார், அம்மா நீங்க பொய் தானே சொல்றீங்க?!’ - என்றாள்.
இல்ல நிஜம்மா தான், நீ மட்டும் பென்சில் சும்மா சும்மா துருவினேன்னு வை நடுராத்திரியில் பென்சில் பூதங்களெல்லாம் கூட்டு சேர்ந்துட்டு உன்னை பயமுறுத்தப் போகுது பாரு’ - என்றேன்.
பதிலுக்கு அவள்;