தாங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறாத மாணவர்களைத் திட்ட ஆசிரியர்கள் பயன்படுத்தும் மிகச் சாதாராணமான திட்டுகளில் ஒன்று, ‘பேசாம வறட்டி தட்டப் போ’ அல்லது ‘சாணி அள்ளப் போ’ என்பதாகவே இருக்கும். இம்மாதிரி திட்டு வாங்கும் போதெல்லாம் கடந்த தலைமுறை மாணவ, மாணவியருக்கு மிகுந்த அவமானமாக இருக்கும். இப்போதைய ஆசிரியர்கள் இப்படித் திட்டுவார்களா? எனத் தெரியவில்லை. ஏனெனில் மொத்தமும் சி.பி.இ.எஸ்.சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தான் முக்காலே மூணு வீசம் மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். அவர்களை ஆங்கிலத்தில் இப்படித் திட்டும் போது எப்படி இருக்குமென்று கற்பனை செய்யமுடியவில்லை.