சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உங்கள் பெயர் N, P, R மற்றும் M என்ற எழுத்தில் தொடங்குகிறதா? நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்!

இந்த உலகில் நம்முடைய முதல் அடையாளம் என்பது நமக்கு வைக்கப்பட்ட பெயர்கள்தான்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:18 pm

உமா பார்வதி


இந்த உலகில் நம்முடைய முதல் அடையாளம் என்பது நமக்கு வைக்கப்பட்ட பெயர்கள்தான். பெயரில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு கணம் உங்களைப் பெயர் அற்றவராக நினைத்துப் பாருங்கள். ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது அல்லவா? உங்களை அழைக்கவும் மற்றவர்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் பெயர்கள் மிகவும் முக்கியம்.

Story image

உலகம் முழுவதும் எத்தனை கோடி மக்கள் உள்ளனர்! ஒவ்வொரு மொழியிலும் எத்தனை எத்தனை கோடி பெயர்கள்! இந்தப் பெயர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்வரை வாழ்ந்து பின் மடிந்து போவதற்கா அல்லது குறிப்பிடத்தக்க செயல்கள் செய்து காலத்தின் நிலைபெறப் போகின்றனவா என்று யார் அறிவார்? பெயர்களைப் பற்றி நினைக்கையில் எனக்குத் தோன்றும் விஷயம் எதுவெனில் ஒரே பெயரில் பலர் இருக்கக்கூடும். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் தனித்தன்மையுடன் வெவ்வேறாக இருக்கிறார்கள் அல்லவா?

Story image

என் பெயரில் இன்னொருவரைப் பார்க்கும்போது, உடனடியாக அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று சிந்திப்பேன். இந்த உலகமும் வாழ்க்கையும் இத்தனை புத்தம் புதியதாக இருப்பதற்குக் காரணம் ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய தனித்தன்மையுடன் இருப்பதால்தான் என்ற உண்மையை உணர்வேன். பெயறற்ற மனிதர்களாக இருப்பதும், பெயர் நிலைத்த புகழாளர்களாக இருப்பதும் அவரவர் தேர்வு. 

Story image

நம் பெயர் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் சமயத்தில் குணங்களையும் அவ்வாறு நமது இயல்புகளாக்கிக் கொள்ள வேண்டும் அல்லவா? பெயர்களுக்குரிய இக்குணங்கள் உண்மையா இல்லையா என்பது முக்கியமல்ல நம்முடைய மனங்கள் அழகாகவும் அன்பாகவும் இருந்தால் வாழ்க்கை இனிமையாகவே இருக்கும். பெயர் எழுத்துக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ :

Story image

என் - N என்ற எழுத்தில் தொடங்கும் பெயருள்ள நீங்கள் கடின உழைப்பாளிகள். உங்கள் வாழ்க்கையில் தேவையான எதுவொன்றையும் உழைப்பின் மூலம் பெற நினைப்பீர்கள். உங்களுடைய வேலையில் தடைகள் ஏற்பட்டாலும் முயற்சியைக் கைவிட மாட்டீர்கள். வெற்றி கிடைப்பதும் உங்களுக்கு சுலபமல்ல. கடும் போராட்டம் இருக்கும். ஆனால் விடா முயற்சியுடனும் போராடும் குணத்துடனும் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். 

Story image

உங்கள் வாழ்க்கையில் சில சிக்கல்கள் அவ்வப்போது தோன்றும். உங்களுடைய அனுபவத்தையும் நம்பிக்கையான மனிதர்களின் நட்புகளால் மட்டுமே அவற்றை தீர்க்க முயற்சிப்பீர்கள். 

நீங்கள் காதல் போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு உடையவர்கள் அல்ல. ஆனால் நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். 

நல்லியல்புகளும் நற்பண்புகளும் கைவரப் பெற்ற நீங்கள் எதைவிடவும் பெரிதாக நினைப்பது ஒழுக்கம் ஒன்றை மட்டுமே.

Story image

பி -  P 

நீங்கள் அமைதியானவர்கள். உங்களுடைய எண்ணங்கள் எப்போதும் உயர்ந்தவை. மற்றவர்களுடன் வளவளவென்று பேசுவது உங்களுக்குப் பிடிக்காது. என்ன தேவையோ அதை மட்டுமே பேசுவீர்கள். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கும் இயல்புடையவர்கள் நீங்கள்.

Story image

உங்களுக்கு ஆசை அதிகம் இருக்கும். ஆனால் லட்சிய வேகம் மிகவும் குறைவு. சுகவாசியாக இருப்பதால் சில சமயம் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள்.

Story image

காதல் போன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவர்கள் நீங்கள். உங்களை நம்பியவர்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபாடு உடையர்கள் நீங்கள். கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் அன்புள்ளம் கொண்டவர்கள் நீங்கள்.

Story image

ஆர் - R 

ஆர் என்ற எழுத்தில் உங்கள் பெயர் உள்ளதென்றால் நீங்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். எந்தவொரு விஷயத்தையும் மிகவும் நுட்பமாகவும் ஆழமாக அணுகி புரிந்து கொள்வீர்கள். இந்த குணத்தால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியாக இருக்கும்.

Story image

உங்களுடைய இயல்புக்காகவும் குணத்துக்காகவும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். உங்களுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்களை நீங்கள்தான் வழி நடத்துவீர்கள். பலருடைய சுக துக்கங்கள் உங்களைச் சார்ந்திருக்கும். உங்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள். காரணம், நீங்களும் யாரையும் ஏமாற்ற மாட்டீர்கள். 

Story image

உங்களுக்குப் பிடிக்காத வேலையை செய்யவே மாட்டீர்கள். ஈடுபாட்டுடனும் முழு மனத்துடனும் செய்ய முடிந்தால் மட்டுமே அந்த வேலையில் தீவிரமாக இறங்குவீர்கள். அதனால்தான் வெற்றி உங்களின் பக்கம் விரைவில் வந்துவிடுகிறது.

Story image

எம் - M 

உங்கள் பெயர் எம்மில் தொடங்குகிறதா? நீங்கள் சுயம் சார்ந்த சிந்தனைகள் அதிகம் உடையவர்கள். உங்களுடைய வாழ்க்கையில் நீங்களே பல விஷயங்களைக் கற்று உணர்ந்து அதன்படி செயல்படுவீர்கள். மற்றவர்களின் உதவி எதனையும் எதிர்ப்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். தவறான செயல்களில் ஒருபோதும் ஈடுபடவே மாட்டீர்கள். மற்றவர்களின் தவறுகளையும் பொறுக்க மாட்டீர்கள்.

Story image

முன்கோபம் அதிகம் உள்ள உங்களுக்கு அந்தக் கோபம் வந்த வேகத்தில் தணிந்துவிடும். உங்களுக்கு ஆடம்பரமாக இருப்பது பிடிக்காது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் இயல்புடைவர்களை நெருங்க விட மாட்டீர்கள். பொதுவாகவே உங்களை அணுகுவது கடினம். காரணம் உங்களின் வெளிப்படையான பேச்சு. மனதில் உள்ளவற்றை ஒளிக்காமல் சுருக்கென்று பேசும் இயல்புடையவர்கள் நீங்கள். எளிமையான வாழ்க்கை, தனிமையான சூழ்நிலை இவையே உங்களின் விருப்பத் தேர்வு.

உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக துணை நிற்கும். வாழ்க்கையில் வேகமாக வெற்றி பெறுவீர்கள். நினைத்தது யாவும் நடக்கும் ஆனால் உங்களுக்கு எதிரிகளின் தொல்லை அதிகம் இருக்கும். பகைவர்களை நண்பர்களாக்கும் பக்குவமும் உங்களுக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.