உடலில் சோடியம் அளவு அதிகமாக இருந்தால் நீங்கள் உணவில் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். உப்பு அதிகம் எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உடலில் உப்பு அதிகம் இருப்பதற்கான சில அறிகுறிகளைப் பார்க்கலாம்.
சோடியம் அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்பட உடலுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவுகளைத் தவிர்த்து உப்பைக் குறைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், இதய நோய் மற்றும் பிற உடல்நலச் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் முடியும்.
தாகம், நீரிழப்பு
சோடியம் உடலுக்குத் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து. இது உடலில் செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள திரவங்களின் சமநிலையை உடல் பராமரிக்க உதவுகிறது. அதேநேரத்தில் அதிகமாக சோடியம் எடுத்துக்கொள்வதும் ஆபத்தை விளைவிக்கும்.
இந்த சோடியம் அளவை நிர்வகிப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது உடலில் உப்பு அதிகம் இருந்தால் அது ஈடு செய்யப்படும். தண்ணீர் அதிகம் குடிக்காமல் அதிக உப்பு சாப்பிட்டால் அதை ஈடுசெய்ய உடல், செல்களிலிருந்து தண்ணீரை எடுத்துக்கொள்ளும். இது நீரிழப்புக்கு வழிவகுக்கும். வறண்ட சருமம், தாகம் இருந்தால் உங்கள் உடலில் உப்பு அதிகம் இருக்கிறது என்று கூறலாம்.

ENS
தலைவலி
சோடியம் அளவு அதிகரித்துள்ளதன் மற்றொரு அறிகுறி தலைவலி. இதற்கு உடலில் நீரிழப்பு ஒரு பங்கு வகிக்கிறது. தலைவலி மந்தமானதாகவும் இருக்கலாம், அதிகமாகவும் இருக்கலாம். தலைச்சுற்றல், எரிச்சல், மந்த நிலை போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக நாள்பட்ட தலைவலியால் அவதிப்படுவோர் உணவில் உப்பைக் குறைப்பது இதிலிருந்து மீள உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சோர்வு
சோர்வும் பலவீனமும் இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இது மூளைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள திரவங்களின் சமநிலையை மாற்றக்கூடும்.
சோடியம் அளவு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது மூளையில் உள்ள திரவ அளவுகள் அதிகரித்து பெருமூளை வீக்கம் ஏற்படலாம்.
இதயத் துடிப்பு
சோடியம் ஒரு எலக்ட்ரோலைட். அதாவது செரிமானம், தசை சுருக்கங்கள், இதயத் துடிப்புகள் போன்ற அத்தியாவசிய உடல் செயல்பாடுகளுக்குப் பங்களிக்கும் ஒரு கனிமம் எனலாம். ரத்தத்தில் அதிக சோடியம் இருக்கும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கலாம். தலைச்சுற்றல், மயக்கம், மார்பு வலி, வியர்த்தல், மயங்கி விழுதல் போன்ற ஏற்படலாம்.

கோப்புப்படம் - IANS
வயிறு வீக்கம்
அதிகப்படியான உப்பு உட்கொள்வதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று வயிறு உப்புசமாக அல்லது வயிறு வீக்கமாக இருப்பது.
கண்கள் வீக்கம்
அதிக சோடியம் கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தலாம். இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு, கீழ் கால்கள், கணுக்கால்கள், பாதங்களில் அதிகப்படியான நீர் நிற்கும்.
உடல் எடை
அதிக சோடியம் கொண்ட உணவில் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
ரத்த அழுத்தம்
உணவில் உள்ள சோடியம் உங்கள் உடலில் திரவத்தைத் தேக்கி வைக்கிறது, இது ரத்தத்தில் உள்ள திரவத்தின் அளவை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பங்களிக்கக் கூடும்.
Summary
Signs that You are Eating Too Much Salt
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?

உணவில் தினமும் எவ்வளவு உப்பு சேர்க்கலாம்?

ஒரு சிட்டிகை உப்புகூட ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும்! தினமும் எவ்வளவு உப்பு சேர்க்கலாம்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



