ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அது என்ன ஏர்போர்ட் ஸ்கின் பிரச்னை? சரி செய்வது எப்படி?

விமானப் பயணங்களின்போது ஏற்படும் ஏர்போர்ட் ஸ்கின் பிரச்னையை சரி செய்வது எப்படி?

Kiro Launches Barely There SPF 35 Skin Tint - A Three-Minute Fix for the 137-Hour Routine

ஏர்போர்ட் ஸ்கின் - ANI

Published On :11 ஜூன் 2026, 12:23 pm IST

ஏர்போர்ட் சரும பிரச்னை என்பது ஏன் உருவாகிறது, அதனைத் தவிர்ப்பது எப்படி, உங்களுக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கையால் இது நிகழுமா என்பது பற்றி பல மருத்துவ நிபுணர்கள் கூறுவது பற்றி பார்க்கலாம்.

ஒருவர் விமானத்தில் பயணிக்க, விமான நிலையம் சென்றிருந்தாலே போதும், அவர்களுக்கு ஏர்போர்ட் ஸ்கின் பிரச்னை வந்துவிடும்.

விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை, விமானத்துக்குள் இருக்கும் காற்று, கூட்டமான விமான நிலைய அரங்கம், நடந்து செல்லும் இடங்கள், விமான தாமதத்தால் ஏற்படும் டென்ஷன், போதிய உறக்கமின்மை, அதிக நேரம் குளிர்சாதன வசதி கொண்ட இடங்களுக்குள்ளேயே மாறி மாறி இருப்பது போன்றவைதான் மக்களின் சருமங்களுக்கு வில்லனாக மாறி விடுகிறதாம்.

இவை அனைத்தும் சேர்ந்துகொண்டோ அல்லது ஏதோ ஒன்று ஒருவர் சருமத்தை பொலிவிழக்கச் செய்யலாம், வறண்டு போக அல்லது அதிக களைப்பாக இருப்பதைப் போலக் காட்டலாம் என்கிறார்கள்.

இவ்வாறு அதிக நேரம் பயணம் மேற்கொண்டு வந்தவர்களுக்கு ஏற்படும் சரும பிரச்னையை ஏர்போர்ட் ஸ்கின் பிரச்னை என்கிறார்கள்.

சிலரோ, விமான நிலையங்களில் அதிக நேரம் காத்திருக்கும்போது அதிகமாக காபி, தேநீர் அருந்துவார்கள். அல்லது குளிர்பானம் அருந்துவார்கள். இவை மேலும் சருமத்தை பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் வறட்சி ஏற்படலாம்.

அது மட்டுமல்ல, பலரும் விரும்பும் விண்டோ சீட் பயணம் கூட சருமத்தை கடுமையாக பாதிக்கும். விமானத்தில் பயணம் செய்யும்போது பலருக்கும் புறஊதாக் கதிர்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். வானத்தில் விமானம் பறக்கும்போது இதன் தாக்கம் அதிகம் ஏற்பட்டு சருமத்தை பாதிப்படையச் செய்யலாம்.

எனவே விமானத்தில் பயணம் செய்வோர் முன்னதாகவே நிறைய தண்ணீர் குடித்து நீர்ச்சத்தை சமநிலையில் வைத்திருக்கலாம்.

சிறந்த தரமான மாய்சுரைசர் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

உதடுகளுக்கு லிப் பால்ம் தடவுதல், கை கால்களை மாய்சுரைசர் க்ரீம்களைக் கொண்டு பாதுகாப்பதும் சிறந்தது.

Summary

How can you treat "airport skin" issues caused during air travel?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.