ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சப்பாத்தி மீந்துவிட்டால் இப்படி செய்து பாருங்கள்!

மீந்துபோன சப்பாத்தியை வைத்து சப்பாத்தி முட்டை கொத்து செய்வது பற்றி...

chappathi

சப்பாத்தி - மகளிர் மணி

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST

சப்பாத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவு. சில நேரங்களில் வீடுகளில் செய்யும் சப்பாத்தி மீந்துவிடும். அப்படி சப்பாத்தி மீந்துவிட்டால் அதனை பல வகைகளில் சூடாகச் சாப்பிடலாம்.

சப்பாத்தி - முட்டை கொத்து

மீந்துபோன சப்பாத்தியை ரோல் செய்து பின்னர் அதனை சிறிதுசிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரியவிட்டு பின்னர் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அத்துடன் ஒரு சிறிய தக்காளியை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது உங்களுக்குத் தேவையான மசாலாக்களைச் சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்தி அளவுக்கு ஏற்ப ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், சிறிதளவு கரம் மசாலா, தேவைப்பட்டால் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி பின்னர் அதில் முட்டையை ஊற்றி வேகவிடவும்.

முட்டை நன்றாக வெந்து வந்ததும் அதனை நன்றாக கிளறி முட்டை மசாலா பதம் அளவுக்கு கொண்டு வரவும்.

தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறியதும் இறுதியாக நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தியை சேர்த்து ஓரிரு நிமிடங்களில் இறக்கிவிடவும். சிறிது மல்லித் தழைகளை மேலே தூவிவிடவும்.

சூடான சப்பாத்தி - முட்டை கொத்து ரெடி!

இதேபோல சப்பாத்தியை நறுக்கி முட்டைக்குப் பதிலாக காய்கறிகள் சேர்த்து மசாலா சேர்த்து வதக்கி சாப்பிடலாம்.

Summary

Food recipe: chappathi egg kothu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.